Tuesday, July 03, 2007

முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்

நேத்திலேர்ந்து மனசு ஆறவேயில்லைங்க. அதொன்னுமில்லைங்க. சிவாஜி படத்துக்கு போயிருந்தேன். படமெல்லாம் நல்லாத்தான் இருந்தது - தலைவர் இருக்கறப்போ லாஜிக்கை பத்தியோ இன்டர்வெல்லுக்கப்புறம் தியேட்டர்காரங்க நிறுத்தின ஏ.சி பத்தியோவெல்லாம் யாருங்க கவலைப்படப் போறாங்க? அதுனால படம் ரொம்பவே நல்லா இருந்ததுச்சுங்க. ஆனா அதுல ஒரு அக்கிரமம் பாருங்க, அதை படம் பாத்து கதை சொன்ன யாருமே கவனிக்கலைன்னு தோணிச்சுங்க. அதை தமிழ்கூறு வலையுலகுக்கு தெரிவிக்கவே இந்த பதிவு.

முதல்ல அப்பாவியா நேர்வழில முயற்சி செஞ்சு தோத்து பிறகு திரும்ப யதார்த்தத்தை புரிஞ்சுகிட்டு எல்லாருக்கும் வரிசைக்கிரமமா மால் வெட்டி எல்லாத்தையும் கட்டி முடிக்கற நேரத்துல சுமன் அவர் முதுகுல குத்தி நடு ரோட்டுக்கு கொண்டு வரும்போது கூட எனக்கு அவ்ளோ ஃபீல் ஆகலைங்க. ஏன்னா நாமதான் இன்டர்வெல்லுக்கு முன்னாடி தலைவர் நடுரோட்டுக்கு வந்த படங்கள் நிறைய பாத்திருக்கோமே, அதும்படி பாத்தா ஒரே பாட்டுல தலைவர் மறுபடி வாழ்க்கைன்ற கன்வேயர் பெல்ட்டுல ஏஏஏ...ஏறிகிட்டே போவாரே... அதான் நமக்கு தெரியுமேன்னு மனசை தேத்திகிட்டு உக்காந்து பாக்க ஆரம்பிச்சேன்.

எதிர்பார்த்தாற்ப் போலவே தலைவரும் சிங்க நடை போட்டு ஜெயிச்சுட்டாரு. அப்பாடான்னு மூச்சு விடப்பாத்தா, அது வரைக்கும் கட்டியிருக்கற தாவணி எப்ப கீழ விழுமோன்னே கவலைபட வச்சிகிட்டிருந்த தமிழ்ச்செல்வி அண்ணி திடீர்னு ஒரு குண்டை தூக்கி போட்டாங்க பாருங்க... அவர் ட்ரைவின் தியேட்டரில் உக்கார வச்சு மடிக்கணிணிய காமிச்சு மாங்கு மாங்குனு தான் பண்ணியிருக்கற சாதனைகளை எல்லாம் விளக்கினதுலேயே, சட்டரீதியா தலைவர் மாட்டிக்க வழியே இல்லைன்னு புரிஞ்சிருக்கணும். அதுக்கப்புறம் ஒரு சூப்பர் கார் ஃபைட்டைப் போட்டு கிங்காங்கோட வாய் வழியா அவங்களை காப்பாத்தி கூட்டி வந்தப்பவே அவரை யாரும் எதுவும் பண்ண முடியாதாக்கும்ன்றதையும் அவங்க புரிஞ்சிருக்கணும். அதெல்லாம் புரியற அளவுக்கு அவங்களுக்கு எங்க மூளையிருக்கு?

அவங்கதான் ஏற்கனவே அந்த மச்சநாக்குக்கார ஜோசியரோட கப்ஸாக்களால கல்யாணமே வேண்டாம்னு சொன்னவங்களாச்சே... தலைவர் ரொம்ப கஷ்டப்பட்டு அவங்களோட மூடநம்பிக்கைய ஒரளவுக்கு போக்கி கல்யா... ச்சீ. வாய் தடுமாறுது பாருங்க, அந்த அப்பாவித் தமிழ்ப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கறார். இருந்தாலும் அந்த மூடநம்பிக்கைய விடாம திருநள்ளாறு போய் தோஷபரிகாரங்கள் செய்யறாங்க...நல்லா கவனிச்சு பாத்துகுங்க மகாஜனங்களே, எங்க பகுத்தறிவு சிங்கம் போகலியாக்கும்... அந்த அம்மாவும் அவங்களோட பெத்தவங்களும் மட்டுந்தான் போயி இதெல்லாம் பண்றாங்க. பின்ன, தலைவர் கல்யாணமே தமிழ் முறைப்படி கட்டினவராச்சே(நான் திருப்பதில நடந்த அவரோட நிஜக்கல்யாணத்தை சொல்லலீங்க... படத்துல பாப்பைய்யா தலைமைல நடந்த கல்யாணத்தைச் சொல்றேன்...) அவரு எப்படிங்க இந்த மாதிரி முட்டாள்த்தனமான விஷயத்தையெல்லாம் செய்வாரு?? ஆனா நம்ம அண்ணிக்கு அவ்ளோ பத்தாது பாருங்க, அதுனால அவங்க இதையெல்லாம் செய்யுறாங்க.

இதை மட்டுமா, அதுக்கப்புறம் சி.பி.ஐ ஆபீஸருங்க ஆபீஸ் ரூம்ல (இது தலைவரோட ஆபிஸ் ரூம் மாதிரி இல்லைங்க, கோவில் தேவஸ்தானத்தின் ஆபிஸ் ரூம்தான். அதுனால No third degree treatment. எனவே அண்ணியோட பொன்னான உடம்பு எதும் புண்ணாயிருக்குமோனோ இல்லை அதை விட முக்கியமா அவங்க கற்புக்கு ஏதும் பங்கம் வந்திருக்குமோன்னோ நீங்க யாரும் பயப்படத் தேவையில்லை.) கூப்பிட்டு மிரட்டினதும் அதை நம்பி தலைவரோட மடிக்கணிணிய ஒரு சாக்குப் பைல வச்சு எடுத்துக்கிட்டு போய் சி.பி.ஐ ஆபிசர்கிட்ட கொடுத்துடறாங்க. அதும் அவர்கிட்ட தலைவரோட உயிருக்கு ஆபத்து வராதுன்னு சத்தியம் வாங்கிகிட்டு... எவ்ளோ முட்டாளா இல்லையில்லை அப்பாவியா இருக்கு பாருங்க நம்ம அண்ணி... இதுனால போலீஸ்கிட்ட மாட்டுற தலைவர், போலீஸ் கஸ்டடியில் சாவு வரை போய் மீண்டு வர்ரார்...

எனக்கு என்னான்னா, அண்ணிங்களையும் இனி படங்களில் கொஞ்சமே கொஞ்சம் மூளையுள்ளவர்களாக காண்பித்தால் தலைவருக்கு வரும் இந்த எக்ஸ்ட்ரா பிரச்சனைகள் இருந்திருக்காதில்லையா? படமும் இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே முடிஞ்சுடுமில்லையா? இந்த படம்தான் என்றில்லை, எண்ணிறந்த பல படங்களில் அற்புத ஹீரோக்கள் கூட அழகுச்சிலைகளாகவும் அறிவற்றவர்களாகவுமிருக்கும் ஹீரோயின்களால்தான் கடைசியில் மாட்டிக்கொள்வார்கள். அதை தவிர்க்கவாவது கொஞ்சம் அறிவுள்ள ஹீரோயின்களாய் காண்பிக்கலாமே...

26 comments:

said...

நிறுத்தனும் எல்லாரும் நிறுத்தனும் இப்படி படம் பார்த்து அறிவுஜீவித்தனமா யோசிக்கிறத நிறுத்தனும்.ஏங்க இதப் போல படத்தை பார்த்து யோசிக்கிறத எல்லாம் என்னிக்கு நிறுத்தப்போறிங்க!

said...

லக்ஷ்மி,திரைப்படங்களில் வருகின்ற 'அண்ணிமார்கள்' எல்லாம் இப்படி சிந்திக்கத் தொடங்கினால், இமயமலையையே புரட்டிப்பார்க்கின்ற தமிழ்ச்சினிமா உலகம் பிறகு அதல பாதாளத்திற்கு அல்லவா போய்விடும் :-).

said...

/தலைவர் இருக்கறப்போ லாஜிக்கை பத்தியோ இன்டர்வெல்லுக்கப்புறம் தியேட்டர்காரங்க நிறுத்தின ஏ.சி பத்தியோவெல்லாம் யாருங்க கவலைப்படப் போறாங்க? /

ஏங்க இப்பிடி ஆரம்பிசிட்டு.... பயங்கர லாஜிக்லாம் வைச்சி கேள்வி கேக்குறீங்க?! 'மன்னன்'படம் நடிச்ச அதே 'தலைவரு'தான..

என்னமோ போங்க!

said...

வவ்வால், டிசே, தென்றல் - நன்றி வருகைக்கும், கருத்து சொன்னதுக்கும்.

என்னிக்கு நிறுத்தமுடியும்னு தெரியாமத்தான் இப்படியெல்லாம் எழுதி குப்பை கொட்டிகிட்டிருக்கேன் வவ்வால் சார்.

அதென்னவோ சரிதான் டிசே, உலகம் தாங்காதுதான்.

தென்றல், நல்லா பாருங்க நான் சொல்லியிருக்கற எல்லாமே வஞ்சப்புகழ்ச்சிதானுங்க.

said...

இன்னிக்கு வரைக்கும் நான் பார்க்கலை. அதான் நான் நல்லா இருக்கேன்.

அப்புறம் நீங்க கேட்டீங்களே ஒரு கேள்வி,//'அண்ணிமார்கள்' எல்லாம் இப்படி சிந்திக்கத் தொடங்கினால்,//

வாய்ப்பே இல்லை. இந்த மாதிரி லூசு ஹீரோயினுங்களை பட்டியலிட்டா நீண்டுக்கிட்டே போகும்.

வேணும்னா ஒரு லிஸ்ட் போடலாமா?

said...

லஷ்மி இதுல கொஞ்சம் புத்திசாலித்தனமா இருக்க வேண்டியது 'அண்ணிங்க' இல்ல. படம் பாக்கிற தங்கச்சிங்க நாமதான்.
நம்மளயெல்லாம் முட்டாளுன்னுதானே சங்கர் இப்படி படம் காட்டியிருக்கார்.

said...

ஐயா நந்தா, எப்படி எப்படி? லிஸ்ட் எடுக்கறதா? அப்புறமா வயத்துப் புழைப்பை யாரு பாக்கறது? நல்லா கிளப்புறாங்கைய்யா, பீதிய...

கண்மணி, இந்த மாதிரி படங்களையெல்லாம் ஒதுக்கறதுன்னு ஆரம்பிச்சா, நாம அப்புறம் எதைத்தான் பாக்குறது? அதுனாலதான் அவங்களா மாறிட மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை.... ஹிஹி...

said...

//. தலைவர் ரொம்ப கஷ்டப்பட்டு அவங்களோட மூடநம்பிக்கைய ஒரளவுக்கு போக்கி கல்யா... ச்சீ. வாய் தடுமாறுது பாருங்க, அந்த அப்பாவித் தமிழ்ப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கறார். //

:-D

//எங்க பகுத்தறிவு சிங்கம் போகலியாக்கும்...//

ஆனா அண்ணி கிடைக்கிற வரை கோயில் கோயிலாப் போவாரு போல!! :))

said...

வாங்க கொத்தனார், அவரு அப்போ கூட சாமி கும்பிட போறதா சொல்லலீங்களே... ஃபிகர் பாக்கன்னுதான்னே மாமா ஏற்பாட்டின்படி அங்க போறாரு... பாபாவுக்கு அப்புறம் தலைவர் ரொம்பவே மாறிட்டாராக்கும்...

said...

தல

அப்புடி அவுங்க மட்டும் தலைவரை மாட்டி விடலேன்னா மொட்ட பாஸ் ரஜினியும் வந்திருக்கவே மாட்டார் . . . . . . .

புரியுதா. . . . . .

பதிவு எழுத முடியலேன்னா மற்ற பதிவுகளுக்கு சென்று பின்னூட்டம் போடவும்.

said...

வாங்க வெங்கட்ராமன்.
//மொட்ட பாஸ் ரஜினியும் வந்திருக்கவே மாட்டார் // இது நல்ல காரணம்தான்.
//பதிவு எழுத முடியலேன்னா மற்ற பதிவுகளுக்கு சென்று பின்னூட்டம் போடவும்.// தங்களின் அறிவுரையை சிரமேற்கிறேன் குருவே... :)

said...

லக்ஷ்மி, படம் பார்த்த பிறகும் பதிவு போடற அளவுக்கு நீங்க முழிச்சுட்டு இருக்கீங்களே, அதிலிருந்தே தெரியலையா....இது அறிவு பூர்வமான படமினு....:))

said...

ஆஹா... வல்லியம்மா, படம் பார்த்துட்டு வெளில வரும்போது சுரத்தா இருந்த ஒரே ஆள் எங்க அண்ணனோட ஏழு மாதமேயான பையன் மட்டுந்தான். ஏன்னா ஏ.ஸி நின்னதுமே அவன் சட்டைய கழட்டி விட்டுட்டோம். அதுனால அவன் மட்டும்தான் இரண்டாவது பாதியையும் ரசிச்சு பாத்துகிட்டிருந்தான். ஆனா ஒரு விஷயம்- இந்த குழந்தைகளுக்கும் ரஜினிக்கும் என்ன கெமிஸ்ட்ரியோ தெரியலை... அவர் சீனில் வரும்போதெல்லாம் இவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம். எங்கண்ணனோட மாமியார்தான் அவனை வச்சிருந்தாங்க - அவங்க கையிலிருந்து தாவுறான் அப்படியே. சமாளிக்க முடியலை அவனை. குழந்தைகளுக்காக போய் ஒரு தரம் பாத்துட்டு வரலாம் - நியாயமான விலையில் டிக்கெட் கிடைத்தால். அவ்ளோதான். மத்தபடி அறிவுஜீவித்தனம்னெல்லாம் சொல்லாதீங்கம்மா, உயர்வு நவிற்சியாயிடப்போகுது.

said...

//..........திருப்பதியில் நடந்த உண்மைக் கல்யாணம்........................//

அப்ப நீங்க பிறந்தே இருக்கமாட்டீங்க. அப்புறம் எப்படி அதுக்குப் போக முடியும்?
அதான் தமிழ்க் கல்யா............ ச்சீ எனக்கும் வாய்குழறுது பாருங்க.
வாழ்வு கொடுத்ததைப் பார்த்துட்டீங்கல்லே. அது போதுமே!:-)

said...

சிந்திக்கும் அண்ணிமார்கள் தமிழ்சினிமாவில் இருக்காங்களா என்ன? நான் பார்த்தவரையில் இதுவரை எந்த தமிழ்சினிமாவிலும் எந்த அண்ணிமாரையும் மனுஷியாக கூட காட்டினதில்லை.அப்படி எந்த படமாவது இருந்தா சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன் பாலசந்தர் படங்கள்னு சொல்லிடாதீங்கோ :)

said...

யக்கா :-))))))))))))))))

said...

நிறுத்தணும்
எல்லாரும் நிறுத்தணும்
இப்படி தமிழ்க் கலாச்சாரத்தைக் காப்பாற்றும் படம் எல்லாம் பார்த்துட்டு, அறிவுஜீவித்தனமா யோசிக்கிறத நிறுத்தணும்

என்ற வவ்வாலை வழிமொழிந்து நவுந்துக்கிறேன்..

said...

லக்ஷ்மி இது என்ன நகைமுரண்? கதாநாயகிகளும் புத்திசாலித்தனமும்- என்ன ஆயிற்று உங்களுக்கு?

said...

படத்துல 'அண்ணி' குடும்பத்தோட 'அண்ணன்' பழகின அழகைப் பத்தி ஒருவார்த்தை கூட சொல்லாம விட்டிடீங்களே :-(

said...

//நிறுத்தணும்
எல்லாரும் நிறுத்தணும்
இப்படி தமிழ்க் கலாச்சாரத்தைக் காப்பாற்றும் படம் எல்லாம் பார்த்துட்டு, அறிவுஜீவித்தனமா யோசிக்கிறத நிறுத்தணும்

என்ற வவ்வாலை வழிமொழிந்து நவுந்துக்கிறேன்..//
அமென்..
:)))

said...

வந்தவங்க எல்லோரும் என்னை மன்னிக்கணும். என்னை மதிச்சு வந்து படிச்சு கருத்து சொன்னவங்களுக்கு நன்றி கூட சொல்ல முடியாத நிலைல கடந்த 5 நாட்களா ஒடிகிட்டேயிருந்தேன். விட்டா, வாழ்கையின் ஓரத்துக்கே ஒடியிருப்பேன். அப்படி ஒரு ஒட்டம்... அப்பாடான்னு இப்போத்தான் இணைய பக்கம் எட்டி பாத்திருக்கேன். வந்தவங்க, வராதவங்க, வர்ர நினைச்சவங்க எல்லாருக்கும் நன்றிங்கோவ்.

said...

டீச்சர், நீங்க சொல்றதை படிக்கறப்போ எனக்கு அகத்தியருக்காக நடந்த மீனாட்சி திருக்கல்யாண கதைதான் நினைவுக்கு வருது... 2 வருஷத்துக்கு ஒருதடவை நமக்கும் இந்த பாக்கியம் கிடைக்குது பாருங்க, ரொம்ப கொடுத்துவச்சவுங்கதான் நாம.
பாலச்சந்தர் படங்கள்??? அய்யனார், எனக்கு ஒரு நெற்றிக்கண் இல்லையேன்னு ஃபீல் பண்ண வைக்கறீங்க.... க்ர்ர்ர்...
உஷா, பொன்ஸ், பத்மா,நாடோடி - எல்லோருக்கும் நன்றி. நிறுத்தணும்ன்ற நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு விழுந்திருக்கற ஓட்டுக்களோட எண்ணிக்கைய பாக்குறப்போ நான் இனி இந்த மாதிரி பதிவுகளை எழுத கூடாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனாலும் என்ன பண்ண? அப்போப்போ மக்கள் இப்படி நம்மை சீண்டிகிட்டே இருக்காங்களே? என்ன செய்யறது சொல்லுங்க?
கதிரவன் சார், நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா? ஏன் இந்த கொலைவெறி??? நான் ஏதோ மேலோட்டமா ஒரு ஆதங்கத்தை எழுத போயி அதுக்கே அங்கங்க எல்லாரும் என்னை கும்மிகிட்டிருக்காங்க. நான் இன்னும் படத்துல நீங்க சொல்ற விஷயங்களையும் சேத்து கிழிக்க போயி.... மருத்துவமணைலேர்ந்தெல்லாம் இணையத்தொடர்பு கிடைக்காதுங்க, நான் ப்லாக் கூட எழுத முடியாம போயிடும்... அவ்வ்வ்வ்வ்.....

said...

நல்லாதான் இருக்கு இந்த பதிவு எப்படி விட்டேன் இத்தனை நாள்?

said...

அபி அப்பா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

லக்க லக்க...லக்க...லக்க
பதிவு கலக்கல்
:)

said...

நன்றி கோவி. கண்ணன் அவர்களே.