Friday, June 15, 2007

ஏமாற்றம்

கைநிறைய நீரள்ளி வைத்து
அதில் நிலவை பார்த்து ரசித்திருக்கும்
சிறு குழந்தையென வாழ்ந்து வந்தேன்
விரலிடுக்கில் நீர் நழுவுவதறியாமல்.
நிலவை காணோமென்று காலுதைத்து அழும்
குழந்தை போலானேன் இன்று.

18 comments:

said...

\\விரலிடுக்கில் நீர் நழுவுவதறியாமல்//

ஹ்ம் ... :(

said...

அழகான கோர்வையான கவிதை...
வாழ்த்துக்கள்...

said...

:)

said...

அய்யனார், என்னாதிது? ஒன்னுமே சொல்லாம ஸ்மைலி மட்டும் போட்ட என்னான்னு புரிஞ்சுக்க?
முத்துலெட்சுமி, ரொம்ப நாளைக்கப்புறம் வலையில் உலாவறீங்க, நல்வரவு. பயணமெல்லாம் எப்படி இருந்துச்சு? துளசி டீச்சர் போல பயணக்கட்டுரை ஏதும் தொடரா போடலாமே நீங்களும்.
வள்ளி, நன்றி - வருகைக்கும் பாராட்டுக்கும்.

said...

//நிலவை காணோமென்று காலுதைத்து அழும்
குழந்தை போலானேன் இன்று//

அழகா இருக்கு. குழந்தையின் மனநிலையை அருமையாய் வடித்துள்ளீர்கள்.

said...

பயணம் இன்னும் முடியலைப்பா...இன்னமும் தமிழ்நாட்டுல தான் சுத்திட்டு இருக்கேன்...அடுத்த மாதம் ஆரம்பிச்சுடுவோம் வழக்கம்போல எல்லாத்தையும்..:)

said...

பாராட்டுக்கு நன்றி நந்தா.
முத்துலெட்சுமி, விரைவில் வந்து உங்கள் சிறுமுயற்சிகளை தொடருங்கள். அப்படியே, கவிதை போட்டில கெலிச்சதுக்கு என்னோட மனமார்ந்த பாராட்டுக்கள். இனிதே தொடருங்கள் பயணத்தை. பத்திரமா ஊர் வந்து சேர்ந்து, பின் மறுபடி தமிழ்மண ஜோதில ஐக்கியமாகிடுங்க. சரியா?

Anonymous said...

இந்தக்கவிதை மிக அழகாக வந்துள்ளது.
விரலிடுக்கில் நீர் நழுவுவதறியாமல், என்பதை ஆங்கிலத்தில் "Water through my Fingers" என்று ஒரு Phraseல் குறிப்பார்கள். நல்ல உவமை.

said...

;




;(
லஷ்மி நமக்கு கவிதையெல்லாம் காத தூரம்....

said...

நன்றி பொற்கொடி. நல்ல கவிதைகளை தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறீர்கள் உங்கள் பதிவில். தொடர வாழ்த்துக்கள்.
டீச்சர், என்ன இப்படி சொல்லிட்டீங்க? ஒரு சாதாரண காதல் கவிதைய கூட ஒரு சின்ன டிஸ்கியால காமெடி வெடியா மாத்தின உங்க திறமைய மறக்க முடியுமா?

said...

//கைநிறைய நீரள்ளி வைத்து
அதில் நிலவை பார்த்து ரசித்திருக்கும்
சிறு குழந்தையென வாழ்ந்து வந்தேன்
விரலிடுக்கில் நீர் நழுவுவதறியாமல்.//
- நிஜமாகவே (அப்ப இத்தன நாளும் நீ பொய்தான் சொல்லிக்கிட்டு திரிஞ்சியா..?)மிக பிரமாதமாக இருக்கிறது கவிதை. வாசித்த நிமிடத்தில் வார்த்தைகளும், அவை சுட்டு்ம் வாழ்வி்ன் னாஅபத்தங்களூம் மனதெங்கும் ஆக்கிரமிக்கின்றன. எளிய ஆனால் வாழ்வின் வலிய பொருள்களைப் பேசும் வார்த்தைகள். ஆனால், மேற்கொன்ன வார்த்தைகளே எனக்குப் போதுமானது. அத்தோடு நான் விரும்பிய கவிதை முடிந்துவிட்டது.

//நிலவை காணோமென்று காலுதைத்து அழும்
குழந்தை போலானேன் இன்று.//
-என்பது எனக்கு அவசியமாயில்லை. (ஆபீஸ் டைம் முடிஞ்ச பிறகு ஆபீஸ் வர்ற மாதிரி..)

said...

பாராட்டுக்கு நன்றி ஆழியூரான். ஆமா, அதென்ன இப்போல்லாம் உங்க மனசாட்சி கொஞ்சம் ஓவர் டைம் வேலை செய்யுது போலிருக்கே... நல்லதில்லைங்க, அதோட சீக்கிரம் ஒரு ரகசிய ஒப்பந்தம் போட்டுக்குங்க, நாலு பேர் முன்னாடி காலை வாரக்கூடாதுன்னு.
//ஆபீஸ் டைம் முடிஞ்ச பிறகு ஆபீஸ் வர்ற மாதிரி..) // ஹி ஹி... ஐ.டில இருக்கறதுனால வர பழக்க தோஷம்னு நினைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமா குறைக்கப்பாக்கறேன்.

said...

முதல் 4 வரிகள் அருமை, 4வது வரி தான் கவிதையின் உச்சம். கடைசி இரண்டு வரிகள் கவிதையின் தாக்கத்தைக் குறைத்துவிடுவதாகத் தோன்றுகிறது. (மனதில் பட்டதை அப்படியே சொல்கிறேன், தவறாக எண்னவேண்டாம்)

said...

சேதுக்கரசி - போலியான பாராட்டுக்களை விட உண்மையான விமர்சனங்கள்தான் நம்மீதான அக்கறையின் வெளிப்பாடுன்னு நானும் நம்பறேன். அதுனால ஸ்பெஷல் நன்றி. கண்டிப்பா நீங்களும் ஆழியூரானும் சுட்டியிருக்கும் இந்த குறையை இனி தவிர்க்க முயற்சிக்கிறேன்.

said...

இதற்காக வருந்த வேண்டியதில்லை. அமாவாசை என நினைத்து மனதை சமாதானம் செஇதுகொள்ளுங்கள். ஆனால் மீண்டும் பவுர்ணமி நிலவினைக் காணும் முயற்சியை கைவிடக்கூடாது.

நிலவை ரசிக்கும் உலகில், அதன்மூலம் சமூக ரீதியாக சிந்திக்கவும் வைக்கிறது இந்த எளிய கவிதை.

Visit my blog to read more poems & add ur comments,

said...

நல்ல கவிதை. மனக்குளத்தில் சில்லாக்கு எறிந்து விட்டீர்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்! புரிந்து விடக்கூடாது என்பதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டு எழுதுகிறார்கள்

said...

//புரிந்து விடக்கூடாது என்பதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டு எழுதுகிறார்கள்//

நொந்தகுமாரன், நீங்கள் நொந்ததன் காரணம் இதுதானென்றால் புரிந்துகொள்வோம், கவலைப்படாதீர்கள் ;)

said...

//நீங்களும் ஆழியூரானும் சுட்டியிருக்கும் இந்த குறையை//

அட நம்ம கல்லுப்பட்டிக்காரரும் இதையே தான் சொல்லியிருக்காருன்னு உங்க பின்னூட்டம் பார்த்துத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்!