Wednesday, January 16, 2008

மொக்கையாய் ஒரு மொக்கை

மொக்கை போடச்சொல்லி நம்ம கண்மணியக்கா கூப்பிட்டு விட்டிருக்காங்க, அதும் சும்மா இல்லீங்க, ஸ்பெஷல் கோட்டாவுல. தட்ட முடியுமா? ஆனாக்க முதல்ல மொக்கைன்னா என்னான்னு பாத்துக்கணுமேன்னு தேடினேன். மொக்கை போடச்சொன்னா நம்ம எழுத்தாளினி ஏகாம்பரி இப்படி ஒரு பெயர்ச்சொல் ஆராய்ச்சி செஞ்சு வச்சிருக்காங்க. அதாவது அவங்க வரையரைப் படி உருப்படியா விஷயம் எதும் அதுல இருக்கக் கூடாது. அவ்ளோதான். அப்படி பாத்தா, நான் ஏற்கனவே போட்ட பதிவுல பாதிக்கு மேல அப்படிதானேன்னு மனசாட்சி சவுண்ட் விட்டது. அதை கண்டுக்காதது போல விட்டாச்சு(வழக்கம்போல).

அப்புறம் நிறைய பேர் கொசுவத்தி சுத்திதான் மொக்கைக்கு மேட்டர் தேத்தியிருக்காங்களேன்னு நானும் ட்ரை பண்ணி பாத்தேன். ஒன்னும் மாட்டலை. சரி, என்னதான் பண்ணலாம்னு பாத்துகிட்டிருக்கும் போது மா.சிவகுமார் வெறுமனே மொக்கைன்னு டைப் பண்ணி அருமையா சமாளிச்சிருந்தார். இதும் நமக்குத் தோணலை பாருன்னு தலைல அடிச்சுகிட்டேன். எப்படி ஒப்பேத்தறதுன்னு ஒன்னும் புரியலை. சரி, ஒரு சிலர் பண்றா மாதிரி என்னோட எழுத்தை பாத்துதான் என்கிட்ட நானே இம்ப்ரஸ் ஆனேன்னு தற்புகழ்ச்சி பதிவா போட்டுடலாமான்னு பாத்தேன். இருந்தாலும் வாழ்கைல சின்னச் சின்ன பொய்கள் சொல்லியிருக்கேனே தவிர ரொம்ப பெரிய பொய்லாம் சொல்லி அனுபவமில்ல. அதுனால அதும் சொதப்பிடும்னு விட்டுட்டேன். வம்பில்லாத விஷயம்னா நம்ம கவிதைதான். எப்படியும் யாருக்கும் எதும் புரியாது - இல்ல கரெக்டா தப்பா புரியும். சோ, அதுதான் சரியான வழின்னு முடிவு பண்ணினேன். ஆனா ஒன்னும் ஒடலை. கடைசியா யோசிச்சுப் பாத்தப்ப இவ்ளோ நேரமா ஒன்னுமே உருப்படியா பண்ணலைன்னு உரைச்சுது. இது, இது, இதுதானே மொக்கைன்றது? அதான், அப்படியே தட்டச்சிப் போட்டுட்டேன்... படிச்சுட்டு சொல்லுங்கப்பா, மொக்கை எப்படியிருக்குன்னு. :)))))

15 comments:

said...

லஷ்மி, இதுக்கு பெயர் உப்புமா இது மொக்கையல்ல. சே, எத்தினி டியூஷன் எடுத்தாலும் புள்ளைங்க தேற மாட்டேங்குதே :-(

said...

லஷ்மி நான் சுத்துனது கொசுவர்த்தியாம்.உன்னோடது உப்புமாவாம்
அப்ப மொக்கைன்னா இன்னான்னு உஷாக்கா கிட்டவே டியூஷன் போலாமா?

said...

எனக்கு உப்புமா கொசுவத்தி மொக்க - ஒண்ணூமே இன்னும் புரிலே

said...

லஷ்மி பதிவுன்னாலே என்ன ஈயம் இருக்குமோன்னு காத்திருப்போரை ரிலாக்ஸ் பண்ணவே மொக்கை போட அழைத்தேன்
நன்றி லஷ்மி

said...

கண்மணி, அழைச்சதுக்கு நான் இல்ல உங்களுக்கு நன்றி சொல்லணும்?
நீங்க போன வாரமே சொல்லியிருந்தீங்கன்னாலும் நான் பொங்கலுக்காக ஊருக்குப் போனதால கொஞ்சம் டிலே.
//லஷ்மி பதிவுன்னாலே என்ன ஈயம் இருக்குமோன்னு காத்திருப்போரை ரிலாக்ஸ் பண்ணவே மொக்கை போட அழைத்தேன்// இதுக்கு ஒரு ஸ்பெஷல் டேங்ஸ்ப்பா...

சீனா, எனக்குப் புரிஞ்சிருந்ததும் தப்புன்னு உஷா சொல்லீட்டாங்க. சோ நானும் கண்மணியும் அவங்க கிட்டதான் டியூஷன் சேரப் போறோம். உங்களுக்கும் வேணும்னா சொல்லுங்க, கர்சீப் போட்டு இடம் போட்டு வச்சுடறோம். :)

உஷா மேடம், டியூஷன் டைமிங், பீஸ் எல்லாம் சொல்லிவுட்டீங்கன்னா ஒரு நல்ல நாளாப் பாத்து வந்துடறோம். எதோ கொஞ்சம் பாத்து வலையுலகப் பாடங்கள்ல தேத்திவுடுங்க...

said...

:)

said...

ஆனா..உஷா...நான் தேறீட்டேன்..:-))

லக்ஷ்மி..நானும் உங்களை டேக்குக்கு கூப்டிருக்கிறேன்...இந்த டேக்குல எந்த பிரச்சனையும் இருக்காது...வாங்க வாங்க வாங்க...டீச்சருக்காக வாங்கப்பா.

said...

http://manggai.blogspot.com/2008/01/blog-post_16.htm

Anonymous said...

//சோ நானும் கண்மணியும் அவங்க கிட்டதான் டியூஷன் சேரப் போறோம்//

நீங்களும் கண்மணியும் போறீங்க சரி. அந்த மொட்டை சோவை ஏன் அழைச்சுட்டுப் போறீங்க? அவருதான் ஏற்கெனவே ஒரு மொக்கை பத்திரிகை நடத்துறாரே? (ஸ்மைலி இல்லை)

சாத்தான்குளத்தான்

said...

உஷாவோட பின்னூட்டம் பாக்கறவரைக்கும் நான்கூட மொக்கையை அருமையா போட்டிருக்காப்லயே நம்ம லக்ஷ்மின்னு நினைச்சுக்கிட்டு கீழே பார்த்தா அப்ப இதும் இல்லையா ? டியூசன் போவேண்டியது தானா ...

said...

//
ஆனாக்க முதல்ல மொக்கைன்னா என்னான்னு பாத்துக்கணுமேன்னு தேடினேன்.
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//
வாழ்கைல சின்னச் சின்ன பொய்கள் சொல்லியிருக்கேனே தவிர ரொம்ப பெரிய பொய்லாம் சொல்லி அனுபவமில்ல.
//
இதெல்லாம் ஓவரா தெரியலை ???

said...

சம்மதம் - உஷா கிட்ட வலைப்பூ பத்திய பாடம் படிக்க சம்மதம் - கூட லஷ்மி, கண்மணி எல்லாம் இருக்கும் போது என்ன கவலை - சீக்கிரமே தேறிடலாம். சிக்கிரமே ஆரம்பிச்சுடலாம்

said...

பாஸ்டன் பாலா, மங்கை, ஆசீப், மங்களூர் சிவா, முத்துலெட்சுமி - அனைவருக்கும் நன்னி...

மங்கை - விரைவில் போட முயற்சிக்கிறேன். அழைப்புக்கு நன்றி.

அண்ணாச்சி - அது இங்கிலிபீசு சோ(So). தமிழ் சோ இல்லை. சோ.ராமசாமி இல்லவே இல்லை. அதெப்படி கரெக்டா தப்பாவே புரிஞ்சுக்கறீங்க நீங்க?

முத்து - டீச்சர் பாஸ் மார்க் போட மாட்டேங்கறாங்க. என்ன செய்ய?

சீனா - கர்சீப் போட்டாச்சு.

மங்களூர் சிவா - எது ஓவர்? நான் பெரிய பொய் எதும் சொன்னதில்லைன்றதா? எதை வச்சு சொல்றீங்க?

said...

//
லக்ஷ்மி said...

மங்களூர் சிவா - எது ஓவர்? நான் பெரிய பொய் எதும் சொன்னதில்லைன்றதா? எதை வச்சு சொல்றீங்க?

//
ஒரு பத்து பவுன் நகைய சேட்டு கடைல 'வெச்சு'தான் சொல்றேன்!!