Friday, December 28, 2007

வீணா தணிகாச்சலம் ... இல்ல இல்ல.. லீனா மணிமேகலையின் தேவதை

மன்னிக்கணும் மக்களே, ரொம்ப நீளமான தலைப்புக்கு.. இது ஒரு சுட்ட பதிவு - ஊதிட்டு படிக்கணுமானெல்லாம் கேக்காதீங்க மக்கா... தோழி.காம் ல வெளியான ஒரு கட்டுரைய இங்கன நகலெடுத்து ஒட்டியிருக்கேன்(காப்பி + பேஸ்ட் :) ) இதுக்கு அவங்க கொடுத்திருக்கற தலைப்பென்னவோ - விதிவிலக்குகள்: முன்மாதிரிகள்: அப்படின்றதுதான். ஆனா அப்படி தலைப்பு வச்சா நம்ம வலையுலக மகாஜனங்களுக்கு பதிவோட உள்ளடக்கம் என்னான்னு தெரியாததால உள்ள எட்டிப் பாக்க சுவாரசியம் வராதே, அதான் ஊரோடு ஒத்து இப்படி ஒரு நச் தலைப்பு...

லீனா மணிமேலையின் தேவதை ஆவணப் படத்தில் இடம்பெற்ற மூன்று பெண்கள் சற்றே வியப்பையும் ஆச்சரியத்தையும் சில கணங்களில் வருத்தத்தையும் தரும் பெண்களாக எனக்குத் தெரிந்தார்கள்.

பெண் இருத்தல் குறித்த தனது கவனத்தைத் தொடர்ந்து தன் படைப்புகளில் பதிவுசெய்துவரும் லீனாவின் இந்தப் படமும் பெண்களைக் குறிப்பாக நம்மிடையே விதிவிலக்குகளாக வாழ்ந்து வரும் பெண்களைப் பற்றியது தான்.

பெண்களுக்கென சமூகம் சில வரையறைகளை வைத்திருக்கின்றது. குடும்பமும் சமூகமும் பெண்ணின் இயங்கு வெளியை எப்பொழுதும் ஒரு எல்லைக்குள்ளாகவே தீர்மானித்திருக்கின்றன. ஆணும் பெண்ணும் சமமாகப் பணிபுரியும் நிலைக்கு இன்று வந்திருந்தாலுங் கூட பெண் இதையெல்லாம் செய்யவே கூடாது என்றும் சில இருக்கின்றன.

வீட்டிற்கு வெளியே செய்யப்படும் பணிகளில் மட்டுமல்ல இந்தப் பாகுபாடு. வீட்டிற்குள்ளும் ஆணுக்கெனச் சில பணிகளும் பெண்ணுக்கெனச் சில பணிகளும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. சமையல், வீட்டு வேலைகள், குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாத்தல் என்பன போன்ற பணிகள் பெண்ணுக்கே உரியவையாகவும் வெளியே செல்லுதல், நிர்வகித்தல், முக்கிய முடிவுகளை எடுத்தல் போன்றவை ஆணுக்குரியவையாகவும் இன்றும் தொடர்கின்றன.

ஆண்பிள்ளை தான் பெற்றோருக்குக் கொள்ளி வைக்க வேண்டும். ஆண் குழந்தை இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது உறவுக்காரர் வைப்பாரே தவிர இறந்தவரின் மகளைக் கொள்ளி வைக்க அனுமதிப்பதில்லை இந்தச் சமூகம்.

இந்தச் சூழலில் ஒரு பெண் சடலங்களைப் புதைப்பதைத் தனது வேலையாகக் கொண்டிருந்தால் அவர் வியக்க வைக்கும் மனுஷி தானே! இன்னொருவர் கால்களில் சலங்கை கட்டிக் கட்டிக் கொண்டு இறப்பு வீடுகளுக்கு ஒப்பாகி பாடச் செல்பவர். இதற்கென ஒரு குழுவோடு ஊர் ஊராகச் சென்று ஒப்பாரி வைத்து வரும் வருமானத்தை எல்லோருடனும் பகிர்ந்து வாழ்பவர்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மற்றொரு பெண் கடலைத் தங்கள் தாய்வீடாக நினைத்து வருபவர். இந்த மூவரும் தான் லீனாவின் தேவதைகள்.இவர்களெல்லாம் விதிவிலக்குகளாக வாழ வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு இந்தத் தொழில்களுக்கு வந்தவர்களா? இல்லை வாழ்க்கையின் போராட்டமும் இவர்கள் சந்தித்த அனுபவங்களும் இவர்களை இப்படி ஆக்கியிருக்கின்றன. சுடுகாட்டில் பிணங்களைப் புதைப்பதும் பிணங்களுக்கு முன்னே ஒப்பாரி பாடுவதும் எந்தநேரமும் இயற்கையின் சீற்றத்தைக் கொண்டு வரும் கடலில் இறங்குவதும் எளிதான காரியமா? ஆனால் இவர்களது வாழ்க்கை இப்படித்தான். இந்தப் படத்தில் பிறரோடு இவர்களின் அன்பும் அக்கறையும் வெளிப்படும் விதமும் அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் நேர்த்தியாய் வெளிப்பட்டிருக்கின்றன.

இந்த மூன்று பெண்களையும் ஆவணப்படுத்தியது இவர்களின் மீதான அனுதாபத்தை உண்டாக்கும் பொருட்டல்ல. இப்படியும் இவர்களால் வாழ முடிந்திருக்கிறது என்பதைக் காட்டத்தான். துயரங்களோடு நகர்ந்தாலும் இவர்கள் வாழும் விதம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

சுடுகாட்டிலேய கடைசி வரையிருந்து அங்கேயே மூச்சை விட வேண்டுமென்று நினைக்கும் ஒரு பெண். (கிருஷ்ணவேணி)

பெண் கடலில் இறங்குவது தீட்டு என்றும் சாமி குத்தமென்றும் சொல்லப்பட்டதைப் பொருட்படுத்தாது மீன்களையும் சங்குகளையும் சிப்பிகளையும் தேடி எடுத்துத் தொழில்செய்து கடலைத் தன் தாய்மடியாகக் கருதும் பெண். (சேது ராக்கு)

பிணங்களின் முன் ஒப்பாரி பாடிக் கிடைக்கும் பணத்தைச் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் அங்கிருக்கும் குரங்குகளுக்கும் தாராளமாகச் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழும் பெண். (லட்சுமி)

செய்யக் கூடாதவை என்றும் ஆண்கள் மட்டுமே செய்யும் தொழில்கள் என்றும் சொல்லப்பட்ட இந்தக் காரியங்களைச் செய்யும் இம்மூன்று பெண்களைத் தேடிச் சென்று ஆவணப்படுத்தியிருக்கியது இந்தப் பதிவு.

மரபுகளையும் மூட நம்பிக்கைகளையும் கடந்து புதிய பாதையில் பயணிக்கும் இவர்களது வாழ்க்கையினை நம்முன் கொண்டு வந்த லீனாவிற்குப் பாராட்டுக்களைச் சொல்லலாம்
தேவதைகள்

திரைக்கதை இயக்கம் : லீனா மணிமேகலை
தயாரிப்பாளர் : ஜெரால்டு
படத்தொகுப்பு : தங்கராஜ்
ஒலி அமைப்பு : சந்தான நம்பி
நேரம் : 42 நிமிடங்கள்

நன்றி: தோழி.காம்

32 comments:

said...

லஷ்மி,

இந்தப்படத்தை பற்றி லேசாக ரிப்போர்டர், குமுதம் ஆகியவற்றில் கோடிட்டு காட்டினார்கள், மேலும் தகவல்களை தந்துள்ளீர்கள் நன்றி!

பார்க்கும் வண்ணம் இருக்கா, வழக்கம் போல டாக்கு மெண்டரினா இப்படித்தான்னு எடுப்பாங்களே அது போல இருக்கா? ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டதா?

சிலர் வீணா தணிகாச்சலத்தை ச்சே இல்லை லீனா மணிமேகலையை இந்தியாவின் ஏழ்மையை படம் பிடித்து காசு சம்பாதிப்பவர் என்று இங்கே பதிவில் குறைப்பட்டிருந்தார்கள். அவர்கள் கருத்தை உடைக்கும் வண்ணம் இருக்கிறது உங்கள் பதிவு!

said...

வவ்வால், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் இன்னும் படம் பார்க்கக் கிடைக்கவில்லை. தோழில வந்திருந்த கட்டுரை - அப்படியே இங்க எடுத்து ஒட்டியிருக்கேன். படத்தோட பேசு பொருள் எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. இது போன்ற எளிய பெண்கள் தங்களோட வாழ்வாதாரத்துக்காக புது விஷயங்களை துணிஞ்சு கைல எடுத்து சாதிச்சும் காட்டறாங்க பாருங்க, அதுதான் உண்மையான முன்னேற்றத்துக்கான பாதைன்னு நான் நினைக்கறேன். அப்படியாப்பட்ட பெண்களைப் பற்றிய படம்னதும் ஒரு ஆர்வம் - அதான் எடுத்துப் போட்டிருக்கேன். நானும் படத்தை எப்படியும் பாத்துடறதுன்னு இருக்கேன் - பாத்துட்டு எப்படியிருக்குன்னும் அவசியம் இங்க பகிர்ந்துக்கறேன்.

said...

இது என்னுடைய முதல் வருகை.
உங்களின் கருத்தைப் பகிர்ந்துக்கொண்டதுக்கு நன்றி

said...

//பெண் இருத்தல் குறித்த தனது கவனத்தைத் தொடர்ந்து தன் படைப்புகளில் பதிவுசெய்துவரும் லீனாவின்...//

....?


வவ்வால்...

//லீனா மணிமேகலையை இந்தியாவின் ஏழ்மையை படம் பிடித்து காசு சம்பாதிப்பவர் என்று இங்கே பதிவில் குறைப்பட்டிருந்தார்கள்//

இதுல 90% உண்மை இருக்கு.

said...

சக்தி, ஆடுமாடு - தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

லக்ஷ்மி உங்கள் பதிவை தினமும் எட்டிப்பார்த்து 'சரி இனிமே எப்போ இவங்க எழுதுவாங்க ' என்று இருந்தபோது ,ஒரு அழகான பதிவு எழுதி உள்ளிர்கள் .

ஏழ்மையை காட்டி புகழ் வாங்குவது என்னும் குற்றச்சாட்டு சத்யஜித் ரே காலத்திலிருந்து வருவது தானே?.பரவாயில்லை.இந்தப் பெண்களின் வாழ்க்கையும் முக்கியமில்லையா

said...

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி சீதா.

//உங்கள் பதிவை தினமும் எட்டிப்பார்த்து 'சரி இனிமே எப்போ இவங்க எழுதுவாங்க ' என்று இருந்தபோது // நமக்கும் இப்படி ரெண்டொருத்தர் இருக்காங்கன்னு நினைக்க ரொம்ப சுகமாத்தான் இருக்கு. இதுக்கு ஒரு ஸ்பெஷல் டேங்ஸ்... :)

said...

வவ்வால்...

//லீனா மணிமேகலையை இந்தியாவின் ஏழ்மையை படம் பிடித்து காசு சம்பாதிப்பவர் என்று இங்கே பதிவில் குறைப்பட்டிருந்தார்கள்//

இதுல 90% உண்மை இருக்கு.

பெண்ணை இயல்பாக எதையும் செய்யவிடதமனிதர் இன்றும் இருக்கிறார்களே என நினைக்க வேதனை தான். பெண்ணை ஏதாவது இப்படி சொல்லியே குட்டி இருத்தும் மனிதருள் வாழ்வபவர்கள் நாம் என நெஞ்சு நிமிர்த்தி நமது விருப்பில் கவனத்தோடு முன்னேற வேண்டியிருக்கிறது பெண்களுக்கு.

said...

அந்தப் பெண்களின் வாழ்க்கை சிறந்ததுதான்..கட்டுரையைப் பார்வைக்கு வைத்த லக்ஷ்மிக்கு நன்றி..

said...

நீங்கதான் மலர்வனமா? என் ப்ளாக்கிற்கு முதலில் இந்தப் பெயரைக் குறிப்பிட்ட போது ஏற்கனவே இருப்பதாக அறிவிப்பு வந்தது...அழகான பெயர்..

said...

நளாயினி, பாசமலர் - உங்க இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பாசமலர், தலைப்புக்கான பாராட்டுக்கு ஒரு ஸ்பெஷல் டாங்க்ஸ். :)

said...

//இதுல 90% உண்மை இருக்கு.//

இதில் உண்மை இருப்பதாகத்தான் எனக்குத் தகவல் தந்தவர்கள் சொன்னார்கள். சில வருடங்களுக்கு முன், வீணா தணிகாச்சலம்(!) அமெரிக்காவுக்கு வந்தபோது, ஒரு அமைப்பின் மூலம் அவரது சில ஆவணப்படங்களைத் திரையிடவும், ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவும் முயற்சி செய்தேன். ஆனால், அமைப்பின் உறுப்பினர்கள் எதிராகக் கருத்துக் கூறியதால், அது முடியாமல் போய்விட்டது. அவரது ஆவணங்களில் நிறைய நல்ல செய்திகள் இருப்பதாகத் தெரிந்தாலும், விளம்பரப் பிரியர், லாப நோக்கு மற்றும் சுய தம்பட்டம் அதிகமுள்ளவர் என்றுதான் அறியப் படுகிறார்.

யார்தான் லாப நோக்கு இல்லாமல் இருக்கிறார்கள்? நல்ல செய்திகளை வெளியில் கொண்டுவந்து, நல்ல விஷயங்களைச் சொன்னால் சரிதான்!

said...

சீதா சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டேய்.

இந்தப் படங்கள் எல்லாம் பார்க்கும் வாய்ப்பு இங்கே எனக்கு அறவே இல்லை.

எங்கேயாவது இது மாதிரிப் படங்களை
(குறும் படங்களை) டிவிடியாகப் பதிவு செய்து விற்கிறார்களா என்ற விவரம் உண்டா?

said...

நல்ல முயற்சி. பாராட்டுவோம்

ஒரு சந்தேகம். செலவு செய்து படம் எடுத்து விட்டு வியாபாரம் ஆக்க வில்லை என்றால் அடுத்த படம் எடுக்க விமர்சனம் செய்பவர்களா பணம் கொடுப்பார்கள்?
இயலதவர்களை வைத்து படம் எடுத்து விட்டு அவர்களுக்கு ஒன்றும் பயன் செய்யாமல் போனால் குற்றம் சொல்லலாம். Leena என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

said...

தஞ்சாவூரான், மங்கை, துளசி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆரம்பத்துலேர்ந்தே வீணா மேல சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் வாய்வழி செய்தியாவே இருக்கு. நம்ம பதிவர்கள் யாரும்(நான் உட்பட) அவங்களோட படைப்புகளைப் பாத்துட்டு பேசலைன்றதால இந்த குற்றச்சாட்டுகளைப் பற்றி என்ன சொல்றதுன்னு தெரியல. துளசி, இங்கையும் குறும்படங்கள் எல்லாம் அவ்வளவா கிடைக்கறதில்லை. நண்பர்கள் மூலமாதான் சிலது டிவிடில கிடைச்சிருக்கு இது வரை எனக்கு. விசாரிச்சு, கொஞ்சம் இவங்களோட படைப்புகளைப் பாத்துட்டு அதை இங்க நிச்சயம பகிர்ந்துக்கறேன்.

said...

இப்படிப்பட்ட வேலைகளை பெண்கள் செய்வதற்கு மன உறுதியும் தன்னம்பிக்கையும் தைரியமும் மட்டும் போதும்.
இதில் ஆண்பெண் என்ற பேதம் எதுக்கு?
விண்வெளியில் பறந்தாலும் சரி இல்லை இடுகாட்டில் வேலை செய்தாலும் சரி பெண் என்றால் குற்றம் காண்பதும் குறை சொல்வதுமே வழக்காகி விட்டது.

said...

விழுந்துவிட்ட அனாதை பிணத்தைக்கூட நடுரோட்டில் படுக்க வைத்து பணம் பண்ணும் நாலாந்தர கேடிகளுக்கும், லீனா மணிமேகலைக்கும் வித்தியாசம் இருக்கா என்ன?

said...

கண்மணி, பாரி.அரசு - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

// மன உறுதியும் தன்னம்பிக்கையும் தைரியமும் மட்டும் போதும்.//ஆனா இன்றைய சூழலில் அவையெல்லாம் கொஞ்சம் சராசரிக்கும் அதிகமா இருக்கணுமில்லையா, புறம் பேசும் மக்களின் பேச்சைத் தாண்டியும் இயங்க? அதை விளம்பரப் படுத்தவும் செய்யணும், ஏன்னா அது இன்னும் நாலு பேருக்கு உத்வேகத்தை தருமில்லையா?

//பெண் என்றால் குற்றம் காண்பதும் குறை சொல்வதுமே வழக்காகி விட்டது// திருந்த ரொம்ப நாளாகும்பா. அதுவரை இதையெல்லாம் அந்தக் காதில் வாங்கி இந்தக் காதில் விட்டுவிட்டுப் போக வேண்டியதுதான்.

பாரி.அரசு,
//மரபுகளையும் மூட நம்பிக்கைகளையும் கடந்து புதிய பாதையில் பயணிக்கும் இவர்களது வாழ்க்கையினை நம்முன் கொண்டு வந்த // இதுவும் அனாதைப் பிணத்தைக் காட்டி பிச்சையெடுப்பதும் ஒன்று என்று நீங்கள் கருதினால், உங்க புரிதல் அவ்வளவுதான் என்றே நான் கொள்ள முடியும். தஞ்சாவூரான் சொல்லியிருப்பது போல சுயலாபம் கருதியே அவர் இப்படங்களை இயக்கினாலும் கூட இது போன்ற பெண்களின் வாழ்க்கையும் அவர்களது வெற்றியும் உரத்துப் பேசப்படவேண்டியதே, இன்னும் சிலருக்கு உத்வேகத்தை தருவதற்காகவேனும். அது தாண்டி அதில் அவர் லாபம் சம்பாதிப்பதுதான் நம் கண்ணை உறுத்துகிறதென்றால், தவறு நம் பார்வையிலென்றே பொருள்.

said...

ஃஃ
அது தாண்டி அதில் அவர் லாபம் சம்பாதிப்பதுதான் நம் கண்ணை உறுத்துகிறதென்றால், தவறு நம் பார்வையிலென்றே பொருள்.
ஃஃ

வெரிகுட்... எவன் குடிக்கெட்டா என்ன? என் பையில் பணம், புகழ்...:(

பறை,மாத்தம்மா, அப்புறம் இந்த சுனாமிக்கு ஓரு குறும்படம் பச்சை கலருல ஏதோ ஓரு என்.ஜி.ஓ.
இதில் உலகம் முழுவதும் லீனா திரட்டிய நிதி எவ்வளவு தெரியுமா உங்களுக்கு?

பறை - பாதிக்கப்பட்ட தலித் பெண்களை குறும்படம் எடுத்து வியாபாரமாக்கி லட்சகணக்கில் பணம் சம்பாதித்த லீனா - உங்களுக்கு சமூக சேவகி :(

வாழ்க உங்கள் சேவை!

said...

பாரி.அரசு, ஒருவரது கருத்தில் ஒரு பாதியை மட்டும் வெட்டி ஒட்டி, அந்த ஒரு பாகத்தின் மீது மட்டும் விவாதத்தை கட்டமைப்பது உங்களுக்கு நன்றாகவே கைவருகிறது.

பொருள் கோள் (interpretation) ங்கற தலைப்புல தமிழ்ப் பாடத்துல விற்பூட்டு, கொண்டுமாற்று என்றெல்லாம் சில வகைகள் சொல்வார்கள். அதுபோல நீங்கள் வெட்டி ஒட்டியிருக்கும் வரிக்கு முந்தைய வரியான இதையும் சேர்த்துப் படித்து புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

//சுயலாபம் கருதியே அவர் இப்படங்களை இயக்கினாலும் கூட இது போன்ற பெண்களின் வாழ்க்கையும் அவர்களது வெற்றியும் உரத்துப் பேசப்படவேண்டியதே, இன்னும் சிலருக்கு உத்வேகத்தை தருவதற்காகவேனும். //

+

ஃஃ
அது தாண்டி அதில் அவர் லாபம் சம்பாதிப்பதுதான் நம் கண்ணை உறுத்துகிறதென்றால், தவறு நம் பார்வையிலென்றே பொருள்.
ஃஃ


ஒருவர் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிப் பேசி மட்டும்தான் பணம் சம்பாதித்தாகவேண்டுமென்றில்லை. பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம் என்றாகிவிட்டால், நான்கைந்து குத்துப் பாடல்களுடன் படமோ இல்லை கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கடிக்கும் சீரியலோ எடுத்துக் கூட பணம் சம்பாதிக்கலாம். ஆனால் தொடர்ந்து பாதிக்கப் பட்டவர்களையும், அடிமட்டத்திலிருந்தாலும் வாழ்கைப் போராட்டத்தில் சோர்ந்து போகாது எதிர்நீச்சல் போடுபவர்களையும் பற்றியே உரக்கப் பேசி வருபவர் உண்மையிலேயே சமூக அக்கறை கொண்டவர்தான். உபரியாக அவர் பணமும் புகழும் சம்பாதிக்கிறார் என்கிற தகவல் ஏன் உங்களை இவ்வளவு உறுத்துகிறது என்று எனக்குப் புரியவில்லைதான். :(

அப்புறம், //வாழ்க உங்கள் சேவை!// நான் ஏதும் சேவை செய்யறதா இன்னி வரை எங்கயும் சொல்லிக்கலை.

said...

ஃஃ
உபரியாக அவர் பணமும் புகழும் சம்பாதிக்கிறார் என்கிற தகவல் ஏன் உங்களை இவ்வளவு உறுத்துகிறது என்று எனக்குப் புரியவில்லைதான்.
ஃஃ

ஏற்கனவே சொன்னது தான், எல்லா ஊரிலும் முச்சந்தி கேடிக்கும்பல் இருக்கும், அது கார்க்கில் முதல் சுனாமி வரை ஊரில் எங்காவது எழவு விழுந்தா நிதி திரட்டக்கிளம்பும், எதுக்கு தெரியுமா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்க்கல்ல! குவட்டருக்கு பைசா தேறும் என்று!

அது போலத்தான் லீனா! எங்கெல்லாம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்களோ அதை குறும்படமாக்கி உலகம் முழுவதும் நிதி திரட்டுகிறார்!

முன்னது லோக்கல், பின்னது இன்டர்நேஷ்னல்! அவ்வளவுதான் வரட்டுமா! :))

said...

ஃஃ
ஒருவர் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிப் பேசி மட்டும்தான் பணம் சம்பாதித்தாகவேண்டுமென்றில்லை. பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம் என்றாகிவிட்டால், நான்கைந்து குத்துப் பாடல்களுடன் படமோ இல்லை கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கடிக்கும் சீரியலோ எடுத்துக் கூட பணம் சம்பாதிக்கலாம்.
ஃஃ

நானும் அதே தானே சொல்லுறேன்! சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்க, பாதிக்கப்பட்ட மக்களை படம் பிடித்து காசு பார்க்கணும் என்கிற எண்ணம் ஏன்?

said...

பாரி.அரசு, அப்ப பாதிக்கப் பட்டவங்களை பத்தி பேசுற படம்னா கைய சுட்டுகிட்டு மட்டுந்தான் எடுக்கணுங்கறீங்க.
மங்கையோட இந்தக் கேள்வியையும் கொஞ்சம் யோசிச்சுப் பாத்துக்குங்க.
//ஒரு சந்தேகம். செலவு செய்து படம் எடுத்து விட்டு வியாபாரம் ஆக்க வில்லை என்றால் அடுத்த படம் எடுக்க விமர்சனம் செய்பவர்களா பணம் கொடுப்பார்கள்?//

இத்தோட, இன்னிக்கு நான் பொட்டிய ஏறக்கட்டறேன். மக்களே, நாளை தொடர்வோம் விவாதத்தை.

said...

"ஆண்பிள்ளை தான் பெற்றோருக்குக் கொள்ளி வைக்க வேண்டும். ஆண் குழந்தை இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது உறவுக்காரர் வைப்பாரே தவிர இறந்தவரின் மகளைக் கொள்ளி வைக்க அனுமதிப்பதில்லை இந்தச் சமூகம். " பெண்கள் இயற்கையிலேயே மென்மையானவர்கள். இதனை மாற்ற முடியாது. ஆகவே நெருப்பு வைத்தல் என்ற ஒரு கொடூரமான வேலையை, அது பிணமாக இருந்தாலும், சற்று முன்பு வரை அது தங்களது தாய் அல்லது தந்தையாகவோதான் இருந்திருப்பர் இல்லையா, ஆண்களிடம் தள்ளி விட்டனர்.
"பெண் கடலில் இறங்குவது தீட்டு என்றும் சாமி குத்தமென்றும் சொல்லப்பட்டதைப் பொருட்படுத்தாது மீன்களையும் சங்குகளையும் சிப்பிகளையும் தேடி எடுத்துத் தொழில்செய்து கடலைத் தன் தாய்மடியாகக் கருதும் பெண். (சேது ராக்கு)"
அம்மணி, கடல் மட்டுமல்ல, எவற்றையும் எந்தக் காலத்திலும் அசுத்தமடையச் செய்யக் கூடாது என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம். அந்த மூன்று நாட்களில் இறங்கினால் கடல் அசுத்தமடையாதா? இந்தப் பழக்கம்தான் மருவி கடலிலேயே இறங்கக் கூடாது என்று வந்துள்ளது.

"மரபுகளையும் மூட நம்பிக்கைகளையும் கடந்து புதிய பாதையில் பயணிக்கும் இவர்களது வாழ்க்கையினை நம்முன் கொண்டு வந்த லீனாவிற்குப் பாராட்டுக்களைச் சொல்லலாம்
தேவதைகள்"

மரபுகளை மீறுவதாலேயே அது சரியாகிவிடாது. எதையெல்லாம் நீங்கள் மூட நம்பிக்கை என்று கூறுகிறீர்களோ அதையெல்லம் ஆராய்ந்து பார்த்து அதன் பின்னிருக்கும் உண்மை என்ன என்பதை அறிய வேண்டும்.
ஆண்களுக்குச் சமம் பெண்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இயற்கையில், உடலமைப்பில் அது சரிதானா? பெண்கள் பொதுவாக உணர்ச்சிப் பூர்வமானவர்கள். நம்பவில்லையா?

சமீபத்திய ஆராய்ச்சி, ஆண்களின் மூளையையும் பெண்களின் மூளையையும் ஆராய்ந்ததில், ஆண்களின் மூளையில் Neural Networks அதிகமாக இருக்கிறது என்றும், பெண்களின் மூளையில் நினைவுகளைச் சேமித்து வைக்கும் White storage cells அதிகமாக இருக்கிறது என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் முடிவு என்னவென்றால், ஆண்கள் முடிவெடுக்க ஏளிதாக உதவுகிறது இந்த நெட்வொர்க்ஸ், ஆனால் பெண்கள் பல விஷயங்களைச் சேகரித்து வைக்கும் திறன் பெற்றிருக்கிறார்களே அன்றி, அவற்றைப் பயன்படுத்தும் ஆற்றலில் குறைந்துள்ளனர். Women are not able to utilizie their database to the optimum; they skim only the surface while men are able to utilize their database of knowledge to the maximum because of the wide neural networks they have in their brains. அம்மணி, இது கூட மூட நம்பிக்கையா?

சாணக்யன்

said...

//அந்த மூன்று நாட்களில் இறங்கினால் கடல் அசுத்தமடையாதா? //
அட அட அட அட.... என்ன ஒரு சூழலியல் அக்கறை சார் உங்களுக்கு.... புல்லரிக்குது போங்க. சரி, அந்த மூன்று நாட்களுக்குத் தரையிலிருந்தால் பூமி அசிங்கமாகி விடாதா? அப்படியே பறந்து கொண்டே இருக்கச் சொல்லிவிடலாமா இந்தப் பெண்களை? அய்யய்யோ.... அப்போதும் காற்று அசுத்தமாகிவிடுமே? பிறகென்னதான் செய்யலாம்? அந்த மூன்று நாட்களுக்கு மட்டும் தற்காலிகமாக இறந்து போகச் சொல்லிவிடலாமா எல்லோரையும்? வடிவேலுவின் காமெடித் துணுக்கு ஒன்றில் ஒருவர் அவரை 'செத்துச் செத்து விளையாட' அழைப்பார். பெண்கள் தங்களின் வாழ்வில் மனோரீதியாக பலமுறை அதைச் செய்யவேண்டியிருப்பினும் உடலளவிலும் அதை மாதமொருமுறை மூன்று நாட்களுக்கேனும் செய்ய முடிந்தால் கொஞ்சம் நிம்மதியாகத்தான் இருக்கும்.

அப்புறம் நீங்க சொல்லியிருக்கறது போன்ற அறிவியல் கண்டுபிடிப்புப் போர்வைக்குள் ஒளித்து உலவ விடப்படும் அபத்தங்கள் இதையும் விட அதிகம் பார்த்துவிட்டமையால்(சமஸ்கிருதம்தான் கம்ப்யூட்டருக்கு ஏத்த பாஷையாக்கும்ன்றதுலேர்ந்து ஆரம்பிச்சு இன்னிக்கு ராமர் பாலம்ன்ற பலூனை ஊத ஆரம்பிச்ச முதல் புள்ளியான நாசா எடுத்த போட்டோ வரைக்கும்) வார்த்தைக்கு வார்த்தை மறுப்புச் சொல்லிக் கொண்டிராது அனுதாபத்தோடு பார்த்துவிட்டு நகரும் பொறுமை இப்போதெல்லாம் எனக்கு நிறையவே வந்தாயிற்று. :) நீங்க குறிப்பிட்ட 'கண்டு'பிடிப்புக்கு மட்டுமில்லாது இடிப்போ நான் எடுத்துக்காட்டுக்காகச் சொல்லியிருக்கும் அபத்தங்களுக்கும் சேத்து நிறையவே சப்பை கட்டுகளோடும் ஆதாரத்துக்கு பலப்பல அநாமதேய இணையதளங்களோட இணைப்புகளுமாய் பதில் வரும்னு தெரிஞ்சாலும் நிச்சயம் நான் அது எதையும் மதிச்சு பதில் சொல்லப் போறதில்லை.. பிரசுரிச்சுரிக்க மட்டும் போறேன், Same அனுதாபத்தோட. :)

அப்புறமா இன்னொரு சின்ன சந்தேகம், அதென்ன எங்க லீனாவோட பேர் தட்டுப்பட்டாலும் உடனே ஒரு attendance போட்டுடறீங்களே, அவங்க மேல அப்படி என்னாங்க காண்டு உங்களுக்கு?

said...

ஓஹ்ஹ்ஹ். இங்க இன்னும் பிரச்சினை ஓடிக்கிட்டுதான் இருக்கா???

//மரபுகளை மீறுவதாலேயே அது சரியாகிவிடாது. எதையெல்லாம் நீங்கள் மூட நம்பிக்கை என்று கூறுகிறீர்களோ அதையெல்லம் ஆராய்ந்து பார்த்து அதன் பின்னிருக்கும் உண்மை என்ன என்பதை அறிய வேண்டும்.
ஆண்களுக்குச் சமம் பெண்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இயற்கையில், உடலமைப்பில் அது சரிதானா? பெண்கள் பொதுவாக உணர்ச்சிப் பூர்வமானவர்கள். நம்பவில்லையா//

ஆணும் பெண்ணும் உடலமைப்பில், சிந்திக்கும் திறனில், மனதளவில், குரல் அமைப்பில், இன்னும் பிற அக மற்றும் புறத் தோற்றங்களின் அமைப்பில் வெகு நிச்சயமாக, சத்தியமாக மாறுபட்டவர்களே.

ஆனால் இதில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது? மாறுபட்ட்டிருப்பது வேறு. தாழ்வுற்றிருப்பது வேறு சாணக்யன்.

ஒருவேளை உடல் வலிமையில் ஆண்கள் பெண்களை விட வலிமையானவர்கள், ஆகையால் பெண்கள் தாழ்ந்தவர்களாகத்தான் கருதப் பட வேண்டும் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுகிறீர்களோ????

//பெண்கள் இயற்கையிலேயே மென்மையானவர்கள். இதனை மாற்ற முடியாது. ஆகவே நெருப்பு வைத்தல் என்ற ஒரு கொடூரமான வேலையை, அது பிணமாக இருந்தாலும், சற்று முன்பு வரை அது தங்களது தாய் அல்லது தந்தையாகவோதான் இருந்திருப்பர் இல்லையா, ஆண்களிடம் தள்ளி விட்டனர்.//

இங்கே பிரச்சினையே இதுதான் சாணக்யன். இன்னொருவருக்கும் சேர்த்து நீங்களாகவே முடிவெடுக்கும் உரிமையை உங்களுக்கு (ஆண்களுக்கு) யார் கொடுத்தது?

இன்னும் நிறைய்ய டைப் பண்ணலாம்தான். ஏற்கனவே இது போன்று நிறையப் பேசி விட்டதால், வேறு தளங்களிலும் இயங்க வேண்டும் என்பதாலும் சின்னப் பின்னூட்டத்துடனேயே நிறுத்திக் கொள்கிறேன்.

said...

அறிவியலையே அபத்தம் என்று தள்ளி விட்ட பிறகு இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? உண்மைகள் தங்களுக்குச் சாதகமாக இல்லையென்றால் அவைகள் பொய் என்று கூறும் தங்களது மனப்பாங்கை மாற்ற இயலாது. ஆகவே இதுபற்றி நான் மேலும் எதுவும் கூற விரும்பவில்லை.

அந்த மூன்று நாட்களில் கடல் நீரை அசுத்தமாக்காதே என்று கூறினால் காற்று அசுத்தமாகும், நாடு அசுத்தமாகும் என்று சொல்லிக் கொண்டே போனால் இதற்கு முடிவே கிடையாது. கடல் என்பது இப்போது உலகத்தின் சாக்கடை ஆகி விட்டது. ஆகவே இப்போது அதில் எது வேண்டுமானாலும் கலக்கலாம்.

நந்தா அவர்களுக்கு,

மாறுபட்டிருக்கிறார்கள் என்றுதான் கூறினேனே தவிர பெண்கள் தாழ்ந்தவர்கள் என்று எங்காவது நான் கூறினேனா? ஆண்களுக்குப் பெண் சமம் இல்லை என்று கூறினேன். ஆனால் ஆண்களுக்குப் பெண் தாழ்வு என்று கூறினேனா?

ஒரே மாதிரியான இரு பொருள்களிடையேதான் ஒப்புமை காண முடியும். "ஆணும் பெண்ணும் உடலமைப்பில், சிந்திக்கும் திறனில், மனதளவில், குரல் அமைப்பில், இன்னும் பிற அக மற்றும் புறத் தோற்றங்களின் அமைப்பில் வெகு நிச்சயமாக, சத்தியமாக மாறுபட்டவர்களே." மாறுபட்டிருக்கும் இரு பொருள்கள் எவ்வாறு சமமாக முடியும் நந்தா?

"இங்கே பிரச்சினையே இதுதான் சாணக்யன். இன்னொருவருக்கும் சேர்த்து நீங்களாகவே முடிவெடுக்கும் உரிமையை உங்களுக்கு (ஆண்களுக்கு) யார் கொடுத்தது?"

நீங்கள் சொன்ன இந்த வாக்கியம் உங்களுக்கே வெகு பொருத்தமாக உள்ளது நந்தா.

எத்தனை காலம் ஆனாலும், காளை மாடுதான் ஏர் உழ முடியும். பசு மாடுதான் பால் தர முடியும். அடிமை விலங்குகளை உடைக்கிறேன் என்று பசுவை ஏர்க்காலில் பூட்ட முடியுமா?

மனிதர்கள் விலங்குகளை விட உயர்ந்தவர்கள் என்று யார் சொன்னது? இந்த பூமியில் எல்லா ஜீவராசிகளும் சமம், எல்லாம் உயிர் என்ற வகையில். ஆற்றலில், புத்தி சாதுர்யத்தில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாமே தவிர, இந்த உயிர் சிறந்தது, இந்த உயிர் மட்டம் என்று கிடையவே கிடையாது. எல்லா ஜீவராசிகளும் வாழத்தான் இந்த உலகம். ஒரு வகையில் பார்க்கப் போனால், மனிதன் இந்த உலகத்தின் மோசமான படைப்பு.

மறுபடியும் சொல்கிறேன், சாணக்யன் ஒரு நாளும் ஆண்கள் உயர்ந்தவர்கள் என்றோ பெண்கள் தாழ்ந்தவர்கள் என்றோ கருதமாட்டான். இயற்கையாகவே உள்ள சில வித்தியாசங்கள், காலம் காலமாக ஒவ்வொரு உயிரினத்துக்கும் சில பண்புகளை வைத்துள்ளது. மரபுகளை உடைக்கிறேன் என்று இயற்கைக்கு மாறாக நடப்பது புதுமை அன்று.


மற்றும் லீனா மணிமேகலை யார் என்றே எனக்குத் தெரியாது. சாணக்யன் என்றும் முகம் பார்த்து அதற்கேற்ப கருத்துக்களைக் கூறுவதில்லை. கருத்துக்க்ளுக்கு மட்டுமே கருத்தொலி செய்வான். (அதென்ன பின்னூட்டம்? water falls என்பதை அருவி என்ற அழகான தமிழ்ச்சொல் இருக்க நீர் வீழ்ச்சி என்று அழைப்பது போலவா? )

சாணக்யன்.

www.chanakyansays.blogspot.com

said...

வாங்க நந்தா.

//இங்க இன்னும் பிரச்சினை ஓடிக்கிட்டுதான் இருக்கா???//
என்னிக்கு இங்க அது இல்லாம இருந்தது? :))))))) ஆனா அதுக்காக நான் ஒன்னும் வருத்தப்பட்டுக்கலை.

//இன்னும் நிறைய்ய டைப் பண்ணலாம்தான். ஏற்கனவே இது போன்று நிறையப் பேசி விட்டதால், வேறு தளங்களிலும் இயங்க வேண்டும் என்பதாலும் // இதே மனநிலையை இப்போதெல்லாம் நானும் அடிக்கடி உணர்கிறேன் நந்தா. அதுவே பல விஷயங்களுக்கு பதில் சொல்லும் ஆர்வத்தைக் குறைக்கிறது. ஹ்ம்ம்.... என்ன செய்ய?

said...

//அந்த மூன்று நாட்களில் கடல் நீரை அசுத்தமாக்காதே என்று கூறினால் காற்று அசுத்தமாகும், நாடு அசுத்தமாகும் என்று சொல்லிக் கொண்டே போனால் இதற்கு முடிவே கிடையாது. // அதையேதான் சார் நானும் கேக்கறேன். நாங்க இருக்கற இடம் அசிங்கமாயிடும்னா அந்த அறிவியல் உண்மை கடலுக்கு மட்டும்தான் applicable - ஆ? நிலத்துக்கு இல்லயான்றதுதான் என்னோட கேள்வி. அதுக்கு பதில காணோமே...

//கடல் என்பது இப்போது உலகத்தின் சாக்கடை ஆகி விட்டது. ஆகவே இப்போது அதில் எது வேண்டுமானாலும் கலக்கலாம்.// ஆனா அந்த சாக்கடையே கூட பெண் இறங்கினால் அசுத்தமாயிடும் இல்லயா? என்ன ஒரு மனிதத் தன்மையுடனான பதில்கள். எனக்கு மறுபடி மறுபடி புல்லரிக்குதுங்க உங்க சுற்றுப்புறச்சூழல் அக்கறைய பாத்து.

1. //மறுபடியும் சொல்கிறேன், சாணக்யன் ஒரு நாளும் ஆண்கள் உயர்ந்தவர்கள் என்றோ பெண்கள் தாழ்ந்தவர்கள் என்றோ கருதமாட்டான்.//
2. //மாறுபட்டிருக்கும் இரு பொருள்கள் எவ்வாறு சமமாக முடியும் நந்தா?//

#1 & #2 - இது ரெண்டையும் எழுதினது ஒருத்தரேதானா??? ஹி..ஹி..ஹி.. ஒரு சின்ன டவுட்டு. அதான்....

said...

:) - தொடருங்கள்..

said...

சாணக்கியன் சார்,

//அறிவியல் கண்டுபிடிப்புப் போர்வைக்குள் ஒளித்து உலவ விடப்படும் அபத்தங்கள் // இது நான் சொன்னது.

//அறிவியலையே அபத்தம் என்று தள்ளி விட்ட பிறகு இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? // இது நான் சொன்னதாக நீங்கள் சொல்வது.

இதுக்கு மேல நான் என்ன சொல்லட்டும்? :(((((

said...

அம்மணி, அறிவியல் கண்டுபிடிப்பு என்று ஒருவர் கூறும்போது அது அபத்தம்; உண்மையல்ல என்று நீங்கள் எப்படிக் கண்டறிந்தீர்கள்?

அந்த மூன்று நாட்களிலே நடுக்கடலிலே நீந்திப் பாருங்கள் அம்மணி. சுறாக்களுக்கு நல்ல விருந்து. சுற்றுச் சூழலில் அக்கறை இருந்ததால்தான் எந்த அசுத்தங்களும் கடலில் கலக்கக் கூடாது என்று கூறினார்கள் நம் முன்னோர்கள். சாக்கடை அசுத்தம் ஆகிவிடும் என்று நான் கூறவில்லை.

பெண்கள் சுதந்திரம் என்பது உடைகளிலோ அல்லது மரபுகளை மீறுவதிலோ இல்லை. அது புரியும்போது நாள் கடந்து விட்டிருக்கும்.

முடிந்தால் இங்கு வந்து பாருங்கள்.

http://chanakyansays.blogspot.com/2008/01/blog-post_25.html