Tuesday, February 13, 2007

அடுத்தது?????

பனிப்புகை மூடிய பாதை போல,
மறைந்த எழுத்தாளர் பாதியில் நிறுத்திப்போன தொடர்கதை போல,
வாழ்வின் எல்லா திசைகளிலும் மறைக்கும் திரைகள் தொங்குகின்றன.
காற்று அசைவற்று நிற்கையில் சலனமற்றிருக்கும்
பாய்மரக்கப்பலொன்றின் பயணி போல்திசையறியாது திணறுகிறேன்.
அடுத்த நொடி பற்றிய யூகங்களும் பயங்களுமாய் கழிகிறதென் வாழ்வு.

4 comments:

Ram said...

நல்ல கற்பனை.

இளமஞ்சள் வேணில்
வானமளவு நம்பிக்கைகள்
எதிர்காலம் வரவே வராது.

வண்டுகளின் ரீங்காரம்போல
நட்சத்திரங்களின் வெம்மைபோல
இறந்த காலம் இறந்துபோனது.

செக்கச்சிவந்த காடுகள்
பனிமூட்டத்தின் ஊடே ஒளி
அமைதியை கிழித்துக்கொண்டு.

கரிய மொட்டைமரங்கள்
பனிக்கட்டிகளைச்சுமந்து நிற்கிறது
ஒரு அற்புதமான வருடம் மீண்டும் கடந்துபோனது.


இது ஒரு ஜென் கவிதையாம்.

பங்காளி... said...

நீங்க லட்சுமியா...முத்துலட்சுமியா?

(நாயகன் ஸ்டைலில் படிக்கவும்).

ஒரு கன்ஃப்யூசன் அதான் கேட்டேன்.

அப்பால ரொம்ப யோசிக்கறீங்க..ன்னு நெனைக்கிறேன். கவிதைய படிச்சா பயம வருது....ஹி....ஹி

லக்ஷ்மி said...

நன்றி ராம்.
திரு. பங்காளி அவர்களே, நான் லக்ஷ்மி. மலர்வனம் எனும் இந்த வலைப்பூவில் எழுதி வருகிறேன். முத்துலெட்சுமி அவர்கள் சிறுமுயற்சி எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்கள். கவிதை அவ்வளவு பயமாவா இருக்குன்றீங்க? இனிமே கொஞ்சம் தகிரியமா எழுத பார்க்கிறேன்.

கனவின் பயணம் said...

vaarththai pirayookam kachchitham
............
unnilum moosam enakku
yUkangakaLum payangkaLumaay kazhikiRathu en thuukkam