Tuesday, October 28, 2008

சினிமா.. சினிமா.. - என் முறை!

தொடர் பதிவுகளைத் தொடர்வதும் தான் பெற்ற இன்பத்தை மற்றவருக்கும் அளிக்கும் விதமாய் அவர்களையும் இழுத்து விடுவதும் வலையுலகில் தவிர்க்க முடியாததாகி விட்டது. மாட்டி விட்ட நந்தாவுக்கு ”கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்”, என்னைப் பார்த்தும் மற்றவர்கள் இப்படி சொல்லாமல் இருப்பதற்காக நான் யாரையும் அழைக்க வில்லை. யாரெல்லாம் இதற்கு பின் இது போன்ற பதிவுகளை போடுகிறார்களோ அவர்களை எல்லாம் நானும் அழைத்ததாக எண்ணிக்கொள்ளவும். :)))


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயதெல்லாம் சரியாக நினைவில்லை. முதல் முதல் பார்த்த படங்கள் திருவிளையாடலும் புன்னகை மன்னனும். வீட்டிற்கு அருகிலிருக்கும் லாரி ஒட்டுனர்கள் ஆயுத பூஜைக்கு வருடா வருடம் தெருவில் படம் போடுவார்கள். அப்படி போடும் படங்களில் ஒன்று பக்திப் படமாகவும் இன்னொன்று புதுப் படமாகவும் இருக்கும். அப்படி பார்த்ததுதான் மேற்சொன்ன இரு படங்களும். ஆனால் அப்போதெல்லாம் படங்களில் இருக்கும் பாடல்களின் இனிமை, மாயாஜால காட்சிகளின் ஈர்ப்பு, சண்டைக் காட்சிகள் இதெல்லாம்தான் நினைவில் நிற்கும். விவரம் தெரிந்தபின் இப்படங்களை மறுமுறை பார்த்த போதுதான் கதையெல்லாம் புரிந்து பார்த்தேன். பள்ளிக் காலம் முடியும் வரை அம்மாவோடு திரையரங்கிற்குச் சென்று பல படங்கள் பார்த்திருக்கிறேன். ஒரளவு புரிந்து பார்க்க ஆரம்பித்தது வீரா என்று நினைக்கிறேன். மேல் நிலைப்பள்ளி போய்க்கொண்டிருந்த கால கட்டம் அது. எனவே லாஜிக்கலாக வீராதான் நான் பார்த்த முதல் படம். :)

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சுப்பிரமணியபுரம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தேன் நிலவு - வீட்டில்(டிவிடி உபயம்) - அருமையான படம், இனிய பாடல்கள், என்னுடைய ஃபேவரிட் ஜோடி வைஜெயந்தி மாலா & ஜெமினி. எல்லாத்தையும் விட டணால் தங்கவேலுவின் காமெடி.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

விஜய், விஜயகாந்த் படங்கள் பார்த்து, பல சமயம் மருத்துவமணைக்கு போகும் படி ஆகி இருக்கிறது. :)

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ரொம்பெல்லாம் இல்லை, ஒரளவுக்கு - குஷ்பு விவகாரம்

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

டிடிஎஸ்(பல முறை காதை ரொம்ப பலமாகவே தாக்கியிருக்கிறது) :)

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கண்ணில் சிக்கினால் சில சமயங்களில் வாசிப்பதுண்டு.

7. தமிழ்ச்சினிமா இசை?

பெரும்பான்மை சராசரி தமிழர்களையும் போல் எனக்கும் இசையென்பது தமிழ்ச் சினிமா இசை மட்டுமாகவே வெகுகாலம் வரை இருந்தது. இப்போதும் பெரும்பாலும் நான் கேட்பது அதையே. எனவே என் வாழ்வில் தமிழ்ச் சினிமா இசைக்கு ஒரு முக்கியப் பங்குண்டு. புத்தகம் போலவே பாடல் சேகரிப்பிலும் ஆர்வம் அதிகம்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

மிக மிகக் குறைவு. இந்தியப் படமென்றால் சில சமயம் மலையாளப் படங்கள், மிகச் சில இந்திப் படங்கள். மிகப் பிடித்த பிற இந்திய மொழிப் படம் பரதம், சர்க்கம். உலக மொழி படங்களென்றால் எனக்கெல்லாம் ஆங்கிலம் மட்டுமே. மிகப் பிடித்த படங்கள் - Forrest Gump, The Terminal (Tom Hanks-ன் அப்பாவித்தனமான நடிப்பு ரொம்பவே உருக வைக்கும்), Meet the Fockers

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

எதுவுமில்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மன்னிக்கவும். எனக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத விஷயத்தின் எதிர்காலத்தைப் பற்றி அளந்து விட நான் ஜோசியரோ இல்லை கேள்வி பதில் பத்தி எழுதும் எழுத்தாளரோ இல்லை. :)

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கோ இல்லை ஒட்டு மொத்த தமிழர்களுக்கோ எதுவும் ஆகிவிடாது என நம்புகிறேன். கொஞ்ச நாட்களுக்கு புலம்ப ஒரு விஷயமிருக்கும். பிறகு பழகிவிடும். மறந்து மற்ற வேலைகளைப் பார்க்கப் போய்விடுவோம் என்று நினைக்கிறேன்.

7 comments:

said...

என்னத்தை சொல்ல நீங்களும் மொக்கைங்கற கேட்டகிரியில சேர்த்திருக்கீங்க. தமிழ்மணமும் நகைச்சுவைங்கிற பகுதிக்கு கீழ காட்டுது.

சரி ஒரு பாதி வந்துடுச்சு. மீதி பாதி எங்க... சீக்கிரம் எழுதச் சொல்லுங்க.

said...

ஆமாம் நந்தா... நானுமே காலைலயே பார்த்தேன் - எப்படி நகைச்சுவைன்னு வகைப்படுத்தினாங்கன்னு தெரியலை. என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணறாங்களோ? ;)

said...

ஆமாம் சிரிப்பு வந்தா நகைச்சுவைதானே.
சினிமா தாக்கத்துல ஆஸ்பத்ரிக்கு போனது நீங்க ஒருத்தராதான் இருக்க முடியூம்.:))
கீழ்ப்பாக்கம்னு சொல்லாம விட்டீங்களே:)
ஏன்னா சினிமா எடுத்து அங்க போனவங்க நிறையன்னு சென்ஸஸ் சொல்லுது.:)

said...

//எப்படி நகைச்சுவைன்னு வகைப்படுத்தினாங்கன்னு தெரியலை//

அதானே, நீங்க என்னன்னா அனுபவம், சுய புராணம், சொந்தக் கதை கணக்குல சேத்துருக்கீங்க, அவங்க நகைச்சுவைல சேத்துருக்காங்க.

இது உங்களுக்கு எதிரான முயற்சியா இல்லை.......

said...

lakshmi vaazthukkal mma....romba lettathaan vishayam theriyum.
let ur life be your blog title .
wishes to both of you.

said...

//சரி ஒரு பாதி வந்துடுச்சு. மீதி பாதி எங்க... சீக்கிரம் எழுதச் சொல்லுங்க.
//
வழிமொழிகிறேன்

said...

in tamil cinema and tv serials there are lots of eve teasing dialougs are delivered which is oppose to women democrasy and equality rights.on other side non tamil womens{hindi,malayalam, kanadam,etc} are grandly invited by tamil media peoples.
feminest should be awer of male domination psychartists advises in tamil magazeens. which is oppose to women democrasy ,equality rights and self confidence.
when tamil men uses his body and mind for acting,modeling,dansing in cinemas and tv serials, wearing convinent dress no question is put against him. but for tamil women they put questions aganist these. all these are male dominationtheories.