Friday, November 02, 2007

கடைத்தேங்காயும் வழிப்பிள்ளையாரும்

ஆனந்த விகடனில் கலைஞரின் ஒய்வு பற்றி எழுதிய கட்டுரைக்கு எழுந்த எதிர்பைத் தொடர்ந்து ஞானியின் ஒ பக்கங்கள் விகடனில் காணாமல் போனது - எவ்வித அறிவிப்பும் இல்லாமல். ஆனால் ஞானி ஒ பக்கங்கள் விகடனில் நிறுத்தப்படுவதாக எழுதிய(தாகச் சொல்லப்படும்) ஒரு மின்மடல் சில குழுமங்களில் பிரசுரமாகியிருந்தது. இன்று ஆனந்த விகடனைத் திறந்தால் வழக்கம் போல ஒ பக்கங்கள் - இம்முறை ஆஸ்திரேலியப் பிரதமரின் கலாச்சாரம் குறித்த கருத்துக்களை மையப்படுத்தி கட்டுரை எழுதியிருக்கிறார். உள்ளூர் விஷயங்கள் ஆபத்தானவை என்பதால் வெளிநாட்டு விஷயங்களை நோக்கி தன் கவனத்தைத் திருப்பியிருக்கிறார் போலும். :) எது எப்படியோ மீண்டும் அவர் எழுதத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியே.

அவர் தனது இந்த வாரக் கேள்வி பகுதியில் குறிப்பிட்டுள்ள விஷயம் மிக நியாயமானது.
//இந்த வாரக் கேள்வி - ஏற்கெனவே தமிழக அரசு பரிசாகக் கொடுத்த சென்னை வீட்டை விற்றுவிட்டு பெல்ஜியத்தில் குடியேறிவிட்ட செஸ் சாதனையாளர் ஆனந்த்-துக்கு, தமிழக அரசு எதற்காக இப்போது 25 லட்ச ரூபாய் பரிசு தர வேண்டும்? அதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் இளைஞர்களுக்கு செஸ் பயிற்சி தர அகாடமி ஆரம்பித்து, அதற்கு ஆனந்த் பெயரைச் சூட்டினால், அதுவே அவருக்கான சிறந்த கௌரவிப்பாக இருக்குமே! //
இதுதான் அவரது கேள்வி. இந்த ஒரு விஷயத்தில் மட்டுமில்லை - பொதுவாகவே வேற்று நாட்டிற்கு குடியேறிவிட்டவர்களின் மீது அவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் பெற்றவுடன் நமது நாட்டு அரசாங்கம் காட்டும் அலாதியான பாசம் தேவையற்றது. தமிழ்த் திரைப்படங்களில் நாயகனோ நாயகியோ சிரமப்படும் நாட்களில் கண்டுகொள்ளாத சுற்றமும் நட்பும் அவர்கள் வெற்றி பெற்றபின் அவர்களது புகழுக்கும் செல்வத்துக்கும் பங்கு கொண்டாட வருவது போன்ற காட்சியமைப்பு அடிக்கடி காணக்கிடைக்கும். அப்படியான காட்சியமைப்பைப் பார்க்கும் பாமர மக்களுக்கும் கூட இவ்வகையான கதாபாத்திரங்கள் மீது வெறுப்பே மிஞ்சும். அப்படியிருக்க இப்படி ஒரு செயலை அரசே ஏன் செய்ய வேண்டும்?

இங்கே இருக்கும் வசதி வாய்ப்புகள் போதாதென்று வேறு நாட்டிற்கு குடியேறுவதற்கு நானொன்றும் எதிரியில்லை. அப்படி முடிவு செய்வதெல்லாம் முழுக்க முழுக்க அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் அப்படி வேற்று நாட்டிற்கு சென்று விட்டவர்களை, அவர்களது புகழை எதற்காக நாம் சொந்தம் கொண்டாட வேண்டும்? அதுதான் போகட்டும், அவர்களுக்கு எதற்காக நமது வரிப்பணம் அள்ளித்தரப் படுகிறது? எந்த விதத்தில் இவையெல்லாம் நியாயமானவை?

ஆனந்திற்கு அளிக்கப்படும் சலுகை, சுனிதா வில்லியம்ஸுக்கு கிடைத்த வரவேற்பு , சமீபத்தில் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட லோகநாதன் என்ற லெக்சரரின் இறுதிச் சடங்குக்குச் செல்ல குடும்பத்தினருக்கு அவசர அவசரமாக தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்கி வழியனுப்பி வைத்தது(9 பேருக்கு பாஸ்போர்ட், விசா, விமானக் கட்டணம் அனைத்தும் நம் அரசே ஏற்றது) என்று இத்தகைய செயல்களின் பட்டியல் நீள்கிறது. இதுதான் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்பதோ?

19 comments:

said...

///ஆனந்திற்கு அளிக்கப்படும் சலுகை, சுனிதா வில்லியம்ஸுக்கு கிடைத்த வரவேற்பு///

ஆனந்த் - வெளிநாட்டில் குடியேறிவிட்ட இந்தியர் அல்ல, அந்த நாட்டின் குடியுரிமையும் பெற்றவர் அல்ல. அடிக்கடி போட்டிகள் ஐரோப்பாவில் நடப்பதால் அவர் வசதிக்காக ஸ்பெய்னில் (பெல்ஜியம் அல்ல) வசிக்கிறார். இந்தியாவிற்காக செஸ் ஒலிம்பியாட்டில் கூட விளையாடி வருகிறார். அவர் விளையாடும் போட்டிகள் அனைத்திலும் அவர் இந்தியக் கொடியின் கீழ்தான் விளையாடுகிறார்.

சுனிதா வில்லியம்ஸை அவருடன் ஒப்பிடவேண்டாம்.

25 லட்சம் ஒரு பரிசு அவ்வளவுதான், அஞ்சு ஜார்ஜ்-க்கு கிடைத்த பரிசு மாதிரி, யுவராஜ் சிங்கிற்கு கிடைத்த பரிசு மாதிரி, ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கினால், வெள்ளி வாங்கினால் கிடைக்கும் பரிசு மாதிரி - இதையெல்லாம் யாரும் விமர்சிக்கக் காணோம், இன்று இந்தியா முழுவதும் எடுத்துக் கொண்டால் ஆனந்த்தின் சாதனையை நெருங்கக் கூட யாரும் இல்லை (இந்த விளையாட்டு உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் ஆடப்படுவது) கிரிக்கட் போல 10 நாடுகளில் ஆடும் விளையாட்டில் சாதனை புரிந்ததற்காக கோடி கோடியாக அள்ளித்தரும் அரசாங்கம் ( தோனிக்கு வீடு-கார், யுவராஜ் - 1 கோடி) தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்குத் தரும் அரசாங்கம், கல்பனா சாவ்லா பெயரில் விருது என்று அள்ளி இறைக்கும் அரசாங்கம் - ஒரு சிறந்த வீரர்க்கு பரிசளிக்கும் போது விமர்சனம் செய்வது அழகல்ல.

/////அவர் தனது இந்த வாரக் கேள்வி பகுதியில் குறிப்பிட்டுள்ள விஷயம் மிக நியாயமானது.
//இந்த வாரக் கேள்வி - ஏற்கெனவே தமிழக அரசு பரிசாகக் கொடுத்த சென்னை வீட்டை விற்றுவிட்டு பெல்ஜியத்தில் குடியேறிவிட்ட செஸ் சாதனையாளர் ஆனந்த்-துக்கு, தமிழக அரசு எதற்காக இப்போது 25 லட்ச ரூபாய் பரிசு தர வேண்டும்? //////

கொடுத்த பரிசை அவர் என்னவோ செய்துவிட்டுப் போகிறார், பரிசு பெற்ற மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று ஏதாவது தெரியுமா?

விவரம் தெரியாமல் பேசும் அவன் ஞாநி அல்ல மூடன்.

(I am totaly upset by the above article by gnani) இன்னும் நிறைய சொல்லாம் - ஒரு தனிப்பதிவாகவே சொல்கிறேன்.

Anonymous said...

பணத்தால் அடிப்பது என்பது இதுதான். யார் பணமாக இருந்தால் என்ன? அவர்களுக்கு ஓட்டுபோடவே காசு கொடுப்பவர்கள், விளம்பரத்திற்காக அரசாங்க காசை வாரிவிடமாட்டார்களா?
கல்யாண வீட்டிலேயே கம்பத்தை கட்டி அழுபவர் சாவு வீட்டில் சும்மா இருப்பாரா என்று சொல்வார்கள்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

world No.1 , it is biggest achivement and rare from one indian. he has made entire tamil nation to feel proud. rs.25 lakhs is nothing for him and it minimum honour.

V.Anand has been staying at spain since it is convenient for him participate in tournaments.. if he wants citizenship in any country he will get red carpet welcome from those countries.

i think issue is not V.Anand and it is only Karunanidhi .. if the same would have been presented by anyother AVAL then Gnani and lakshmi people would have welcomed..

said...

யாரோ ஒருவன், பொற்கொடி, பாலா - அனைவருக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முதலில்.

யாரோ ஒருவன் - மற்ற விளையாட்டுகளுக்கு கிரிக்கெட் அளவு ஏன் முக்கியத்துவம் இல்லை என்பது எனக்கும் இருக்கும் ஆதங்கம்தான் என்றாலும் கூட இங்கே ஏன் ஒரு செஸ் வீரருக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று கேள்வியெழுப்பவில்லை. வெளிநாட்டில் தங்குவது என்று முடிவு செய்துவிட்ட ஒருவருக்கு நமது அரசாங்கம் இப்படி ஒரு பரிசைத் தர வேண்டிய அவசியமென்ன?

//ஆனந்த் - வெளிநாட்டில் குடியேறிவிட்ட இந்தியர் அல்ல, அந்த நாட்டின் குடியுரிமையும் பெற்றவர் அல்ல.// இது எனக்குப் புதிய செய்தி - நான் அவர் அந்நாட்டிலேயே நிரந்தரமாகத் தங்க முடிவு செய்திருப்பதாகத்தான் முந்தைய அவரது பேட்டிகளிலிருந்தும் கூடப் புரிந்திருந்தேன் - நிரந்தரமாக அங்கேயே தங்க எண்ணாதவர் இங்கேயிருக்கும் வீட்டை எதற்காக விற்கப் போகிறார் என்கிற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

//அடிக்கடி போட்டிகள் ஐரோப்பாவில் நடப்பதால் அவர் வசதிக்காக ஸ்பெய்னில் (பெல்ஜியம் அல்ல) வசிக்கிறார். // அப்படியா? இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு போக்குவரத்தே ரொம்ப கடினம் போலும் - ஐயோ பாவம்....

//கொடுத்த பரிசை அவர் என்னவோ செய்துவிட்டுப் போகிறார்// பரிசு முதல்வரின் சொந்த சம்பாத்தியத்திலிருந்து கொடுக்கப் பட்டிருந்தால் யாரும் இப்படியெல்லாம் கேள்வியெழுப்பப் போவதில்லை. ஆனால் அது நம் வரிப்பணமய்யா வரிப்பணம். அப்பரிசு அதை அலட்சியம் செய்பவரைச் சென்று சேர்கிறதென்றால் அதைக் கேள்வி கேட்க நிச்சயம் நமக்கு உரிமை உண்டு.

//விவரம் தெரியாமல் பேசும் அவன் ஞாநி அல்ல மூடன்.// இது அப்பட்டமான தனிநபர் தாக்குதல். இதைத் தவிர்த்து உங்களின் கருத்துகளை மட்டும் முன்வைக்கலாமே?

said...

/// நிரந்தரமாக அங்கேயே தங்க எண்ணாதவர் இங்கேயிருக்கும் வீட்டை எதற்காக விற்கப் போகிறார் என்கிற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. ///
ஏங்க, அரசாங்கம் வீடு தர வரக்கும் அவரு வீதியிலயா இருந்தாரு, இந்த வீடு அவருக்குத் தேவைப்படல அவ்வளவுதான்.


// அப்படியா? இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு போக்குவரத்தே ரொம்ப கடினம் போலும் - ஐயோ பாவம்....///

அது உங்களுக்குத் தெரியாது. Logistical problem அடிக்கடி வெளிநாடு போக, விமானங்கள் மாற


// பரிசு முதல்வரின் சொந்த சம்பாத்தியத்திலிருந்து கொடுக்கப் பட்டிருந்தால் யாரும் இப்படியெல்லாம் கேள்வியெழுப்பப் போவதில்லை. ஆனால் அது நம் வரிப்பணமய்யா வரிப்பணம். அப்பரிசு அதை அலட்சியம் செய்பவரைச் சென்று சேர்கிறதென்றால் அதைக் கேள்வி கேட்க நிச்சயம் நமக்கு உரிமை உண்டு. ///

அதைக் கேள்வி கேட்க நிச்சயம் நமக்கு உரிமை உண்டு - என்ன கேள்வி? ஆனந்திற்கு எதற்க்காக என்பதா? செஸ்ஸிற்கு எதற்க்காக என்பதா? விளையாட்டிற்கு எதற்க்காக என்பதா?மத்த விளையாட்டு வீரர்களுக்கெல்லாம் தராம இவருக்கு மட்டும் ஏன் தந்தாங்க என்பதா? சும்மா நம்ம வரிப்பணம்,நம்ம வரிப்பணம் என்கிறீர்களே - தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்குத் தருகிறதே அரசாங்கம் - ஏதாவது கேள்வி உண்டா, அல்லது விளையாட்டு போல அதுவும் ஒன்றா?

said...

ஐயா cecil,
//i think issue is not V.Anand and it is only Karunanidhi .. if the same would have been presented by anyother AVAL then Gnani and lakshmi people would have welcomed..// பிரச்சனை ஆனந்திற்கு கொடுக்கப் பட்ட தொகைதாங்க.. இதே கொஞ்ச நாள் முன்னால தடகள வீராங்கனை சாந்திக்கு மனிதாபிமான அடிப்படைல 10 லட்சத்தை இதே கருணாநிதி வழங்கியபோது ரொம்பவே பெருமிதமாத்தான் இருந்தது - ஏன்னா வறுமைல வாடற, பாலியல் சோதனைன்ற பெயரில் காயப்படுத்தப் பட்ட ஒரு வீராங்கனைக்கு உதவித் தொகை கொடுக்கப் பட்டதால அது தேவைப்படும் ஒருவருக்குதான் சென்று சேர்கிறது என்கிற நிம்மதி அது. ஏற்கனவே பரிசாய்த் தரப்பட்ட வீட்டை விற்றுவிட்டு வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு பரிசுத் தொகை தருவது தொப்பைக்கு மேல் கஞ்சின்ற கதைதான். அப்புறம் யாரு செஞ்சிருந்தா நான் எப்படி பேசியிருப்பேன்ற மாதிரியான ஆருடங்களையெல்லாம் தவிர்த்துவிட்டு உண்மையிலேயே ஏதேனும் மாற்றுக் கருத்திருந்தால் மட்டும் எடுத்து வைக்கவும்.

said...

சாதனையாளருக்குத் தரப்படும் பரிசுத் தொகை அவர்களுக்குப் பயன்படுவதற்காக அல்ல; அதைப் பார்த்து ஊக்கம் அடையும் அடுத்த சந்ததியின் ஊக்க வேருக்கான நீர்ப்பாய்ச்சல் அது.

உலகம் சிறிய உருண்டை ஆகி விட்டது. அவர் இங்கே தங்கவில்லை; அந்த நாட்டவர் ஆகி விட்டார் அவருக்கு எதற்காக பரிசு என்று கேட்பது, கல்யாணம் ஆகி வெளிநாடு போய் விட்ட மகளின் பிரசவத்தைக் கண்டு கொள்ளாமல் தாய் வசனம் பேசுவதற்குச் சமமான விஷயம்.

எங்கே போனாலும் தொப்புள்கொடி உறவு தான் தாய்நாட்டு ஒட்டுதல் என்பது.

இன்றைய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாடுவாழ் இந்தியர்களின் டாலர் மட்டும் கசப்பதில்லை; அவர்களுக்குத் தரப்படும் பரிசுத் தொகையில் என்னுடைய வரிப்பணம் எவ்வளவு என்கிற சிந்தனை நியாமற்றதாகத் தோன்றவில்லையா?

கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் என்கிற வெட்டிக் கூத்துக்களுக்கு அரசாங்கம் அள்ளித் தரும் பணத்தில் வீணாவதில்லையா நம் வரிப்பணம்?

said...

//ஏங்க, அரசாங்கம் வீடு தர வரக்கும் அவரு வீதியிலயா இருந்தாரு, இந்த வீடு அவருக்குத் தேவைப்படல அவ்வளவுதான்.// என்னுடைய கேள்வியும் அதேதான் - தேவையில்லாத ஒரு பரிசை ஒருவருக்கு எதற்காகத் தர வேண்டும்?

ஒன்னு அரசு ஒரு பொதுவான நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் - இப்படி எந்தவொரு போட்டியில் நம் நாட்டின் சார்பா ஜெயித்து வந்தாலும் இவ்வளவு பரிசுத் தொகையாகத் தரப்படும் என்று. அல்லது உண்மையிலேயே வறுமையிலிருப்பவர் அல்லது பாதிக்கப் பட்டவர் என்பது போன்ற சிறப்புக் காரணங்களுக்கு மட்டும் சாந்திக்கு தந்தது போல பரிசளிக்கலாம். எதுவுமில்லாது குத்து மதிப்பாக பரிசுகள் அறிவிக்கப் பட்டால் ஓவ்வொரு முறையும் இது போன்ற விவாதங்கள் எழத்தான் செய்யும்.

ரத்னேஷ், ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று பெருமிதம் கொள்வதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் அதற்காக அவர்களுக்குத் தரப்படும் அதீத முக்கியத்துவம் தேவையில்லை இல்லையா? ஊக்கமளிக்க பரிசுத் தொகையென்றால் அது ஒரு பொதுவான திட்டமிருக்க வேண்டுமில்லையா? ஒன்று நெறிமுறைப் படுத்தப்பட்ட பரிசுத் திட்டங்கள் விளையாட்டைப் பொறுத்தவரை அறிவிக்கப் படலாம். அப்போது ஏன் கிரிக்கெட்டிற்கு மட்டும், ஏன் ஹாக்கிக்கு இல்லை என்பது போன்ற கேள்விகள் தவிர்க்கப் படலாம். இல்லையா மனிதாபிமான அடிப்படையில் தேவையுள்ளோருக்கு மட்டுமே உதவி என்று அறிவித்துவிடலாம். இரண்டுமில்லையென்றால் ஒவ்வொரு முறையும் மனக்கசப்புதான் மிஞ்சும்.

//கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் என்கிற வெட்டிக் கூத்துக்களுக்கு அரசாங்கம் அள்ளித் தரும் பணத்தில் வீணாவதில்லையா நம் வரிப்பணம்?// கோவில் கும்பாபிஷேகத்துக்கு அரசுப் பணமா? இது என்ன புதுக்கதை ரத்னேஷ்? கோவில் திருப்பணியோ கும்பாபிஷேகமோ அது பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் நன்கொடை மூலம்தான் நடக்கிறது. அதற்காகத்தான் பணம் தருகிறோம் என்று அந்த மக்களுக்குத் தெரியும் - அப்போது அங்கே நம் பார்வையில் வீணாவதாகத் தோன்றும் பணம் தருபவர்கள் பார்வையில் புண்ணியம் தேடித்தருகிறது. எனவே அதையும் அரசுக் கருவூலத்திலிருந்து வெளியேறும் பணத்தையும் ஒப்பு நோக்க முடியாது.

said...

லக்ஷ்மி அவர்களே, என் கருத்து..
ஒருவருக்கு அரசாங்கம் விருதோ பரிசோ தரும்பட்சத்தில். அவர் சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்றுள்ளாரா என்பதை பார்பார்களே அன்றி அந்த பரிசை அவர் என்ன செய்வார், என்ன செய்தார், எங்கு தங்கியிருக்கிறார் என்று பார்பது தேவைஇல்லை என்பது என் கருத்து.

////விவரம் தெரியாமல் பேசும் அவன் ஞாநி அல்ல மூடன்.// இது அப்பட்டமான தனிநபர் தாக்குதல். இதைத் தவிர்த்து உங்களின் கருத்துகளை மட்டும் முன்வைக்கலாமே? ////

இதை தனிமனித தாக்கு என்று சொல்லியிருக்கும் நீர் .. இதையும்
\\கடைசி நிமிஷத்துல, பட்டப் பிரியரான மஞ்ச துண்டு அந்த பட்டத்தையும் தனக்கே தர வேண்டும்னு பிடிவாதம் பிடிச்சிருக்க வாய்ப்புண்டு.கஷ்டம் தான்.\\
சொல்லியிருக்கலாமே// presented by anyother AVAL then Gnani and lakshmi people would have welcomed..//

இது தேவையில்லாத வாதம்.. இது போன்ற வாதம் தவிர்க்கப்படவேண்டும்.

said...

பொதுவாக உங்கள் கருத்துக்கள் எனக்கு ஏற்புடையவையாகவே இருந்திருக்கின்றன. ஆனால் இவ்விடுகையிலுள்ள கருத்துக்களை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு தமிழர் எங்கு சென்றாலும் தமிழர்தான். குறிப்பாக, கொலை செய்யப்பட்ட பேராசிரியரின் உறவினர்களுக்கு பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டது பற்றியெல்லாம் நீங்கள் வருத்தப்படுவது வியப்பை அளிக்கிறது. ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்ற வகையில்் அது சரியனதே. (எல்லாருக்கும் இந்த வசதிகள் கிடைக்கின்றனவா என்றெல்லாம் யோசிப்பதை விட, தேவைப்பட்டவர்களுக்கு வேண்டிய நேரத்தில் கிடைத்த உதவி என்று இதை எடுத்துக் கொள்ளலாம்). ்

said...

திஸ் அன்ட் தட் - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//இதை தனிமனித தாக்கு என்று சொல்லியிருக்கும் நீர் .. இதையும்
\\கடைசி நிமிஷத்துல, பட்டப் பிரியரான மஞ்ச துண்டு அந்த பட்டத்தையும் தனக்கே தர வேண்டும்னு பிடிவாதம் பிடிச்சிருக்க வாய்ப்புண்டு.கஷ்டம் தான்.\\
சொல்லியிருக்கலாமே//
நிச்சயமாய் அதையும் சொல்ல நினைத்திருந்தேன். அந்தப் பின்னூட்டம் யாரோ ஒருவருக்கான பதிலிலேயே கொஞ்சம் பெருசாயிட்டதுல அதை மிஸ் பண்ணியிருந்திருக்கேன். யாரும் நம்பணும்ங்கறதுக்காக இதைச் சொல்லலை.

பாலா - நீங்களும் தனிநபர் தாக்குதலை தவிர்த்து வாதங்களை மட்டும் முன்வையுங்கள்.

said...

I wonder how the objections from few tamil people itself for an honor for biggest achievement..

V.anand is not getting sponsorship as cricketers used to get or indian chess association is not sponsoring his expenses for participating in chess tournaments. mostly he use spend for his participation and he use to have tournaments at Europe only . it is really tough task for professional like him staying at chennai visiting Europe often. it is right choice for him to stay at spain on economical grounds and saves more time.
he made us proud and everything he achived is all his personnel ability and hardwork.

he might have sold out his house for many reasons he might have been shortage of money or he may have another house at chennai etc. involving this kind of personnel things are ridiculous..

i don't find any other reasons for this narrow minded objections except it has been done by m.k.

he is cm and representative of tamilnadu, if he doesn't have power to do such small things then there is no value of that post, in fact if has done the same he should have been blammed.

said...

நான் மனிதாபிமான அடிப்படைல கொடுத்த உதவிகளைக் கேள்வி கேக்கலை. எங்க போனாலும் தமிழன் அப்படின்ற உணர்வும் சொந்த நாட்டின் மீதான ஒரு சென்டிமென்டல் அட்டாச்மென்ட்டும் போய்விடாதுதான். ஆனா பொதுவாவே மக்களிடமிருக்கும் வெளிநாட்டு மோகத்தைப் போலவே அரசும் இத்தகையோரிடம் ஒரு அதீதப் பாசத்தை வெளியிடுவதுதான் எனக்கு உடன்பாடானதாயில்லை.
//எல்லாருக்கும் இந்த வசதிகள் கிடைக்கின்றனவா என்றெல்லாம் யோசிப்பதை விட, தேவைப்பட்டவர்களுக்கு வேண்டிய நேரத்தில் கிடைத்த உதவி என்று இதை எடுத்துக் கொள்ளலாம்// அதே சம்பவத்தில் பாதிக்கப் பட்ட மாணவி ஒருத்தருக்கு இத்தகைய உதவிகளெதுவும் அளிக்கப் படவில்லை என்பதுதான் அந்த விஷயம் ரொம்பவே உறுத்தலாய் தெரிந்ததற்கு காரணம் (அந்தப் பேராசிரியர் தான் இறந்தாலும் தன் இறுதிச்சடங்குகள் அமெரிக்காவிலேயே நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததாகவும், அதற்காகவே குடும்பம் மொத்தமும் அங்கே கிளம்பிச் சென்றதாகவும் ஒரு செய்தி. இது எந்த அளவு உண்மையென்று எனக்குத் தெரியாது. ஆயினும் இதுவும் அச்செய்கையில் எனக்கு ஒரு கோபம் எழுந்ததற்கு ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை)
cecil, பாலா - உங்களிருவருக்குமே ஒரு விஷயத்தை இங்கே நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். இது கலைஞர் எடுத்த முடிவுன்ற வகையில் நான் இதை எதிர்க்கவில்லை. எனக்குத் தெரிந்தவரை யார் முதல்வர் பதவில இருந்திருந்தாலும் இதே வகையான ஒரு செயலைச் செய்திருப்பார்கள் என்றே நான் எடுத்துக் கொண்டு அந்த மனோபாவத்தையே அதாவது வெளிநாடு வாழ் மக்களை சற்று அதிகப் படியாக கவனித்தல் என்பதைத் தான் எதிர்க்கிறேன். இதற்கு மேலும் இதை ஒரு தனிநபர் தாக்குதலாக இனம் கண்டு அதனடிப்படையிலேயே ஆதரிப்பதும், எதிர்ப்பதுமாய் கருத்துச் சொல்லிக்கொண்டிருக்கப் போவதாயிருந்தால் நான் அது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

said...

ஆனந்திற்கு இப்பணம் தேவையா என்பதை விட செஸ் என்ற விளையாட்டில் சாதித்தற்காக தரலாம்,இது ஒரு அங்கீகாரம் அளித்தல் தான்(ஆனந்த் போன்றவர்களுக்கு அப்பணம் தேவையே இல்லை) இந்தியா என்னை எப்படி வரவேற்கிறது எனப்பார்ப்போம் என்று பேட்டியே கொடுத்தார், எனில் இந்தியாவில் அவருக்கு உரிய மரியாதையை அவரே எதிர்ப்பார்த்து இருக்கிறார் என்று தானே அர்த்தம்.கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளுக்கு கவனிப்பு இல்லை , பாராட்டு இல்லை என்பதை தவிர்க்க தான் இப்பரிசு என்று நினைக்கிறேன்.

ஆயிரம் எதிர்மறையான காரணங்கள் இருந்தாலும் , அவரால் இந்தியாவிற்கு பெயர் கிடைத்துள்ளது,
மிக நீண்ட காலமாக கோலோச்சிய ரஷ்ய ஆதிக்கம் , பின்னர் அமெரிக்கா தான் , அவர்களை எல்லாம் தாண்டி இந்தியாவில் இருந்து ஒருவர் இப்படி வருவார் என்று கனவிலும் அயல் நாட்டவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.

செஸ் பிறந்த நாடே இந்தியா தான் அதில் தமிழ் நாட்டை சேர்ந்தவர் சாதித்தது ஒரு பெருமை படக்கூடிய ஒன்று தானே.எனவே ஒரு இந்தியனாக எனது பார்வையில் பாராட்டினால் ஒன்றும் தப்பில்லை என்பேன். என் தனிப்பட்ட கருத்தாக பணம் தர தேவை இல்லை என்பேன்.

செஸ் போட்டிகளில் தரப்படும் பரிசு அதிகம், அதை விட பெரிய கிராண்மாஸ்டர்கள் கலந்து கொள்வதற்கா தரப்படும் "participation fees" ரொம்ப அதிகம், செஸ்சில் அப்படி ஒரு ஏற்பாடு உண்டு. அதுவும் ஆனந்த் ஒரு சூப்பர் கிராண் மாஸ்டர் அனேகமாக அவருக்கு தான் தற்போது அதிக பணம் கலந்துகொள்ள தருவார்கள் என நினைக்கிறேன்.

ஆனந்த் ஸ்பெயினில் தங்க முதல் காரணம் போட்டியில் கலந்துகொள்ள என்பது வெளியில் சொல்வதாக வேண்டுமானால் இருக்கலாம். உண்மையில் அவர் சம்பாதிக்கும் பணத்திற்கு வரி கட்டாமல் இருக்க தான்.அதாவது இந்தியாவில் இருந்து போட்டிகளில் கலந்து கொண்டு சம்பாதித்தால் அதற்கு இந்திய மதிப்பில் வரி கட்ட வேண்டி வரும். அதுவே வெளிநாட்டில் இருந்து விளையாடி சம்பாதித்தால் அது வெளிநாடு வாழ் இந்தியர் சம்பாதிப்பாக கருதப்படும், இந்தியாவில் வரி கட்ட வேண்டாம் அவர்.

அப்படி எனில் ஸ்பெயினில் வரிக்கட்டாமாலா இருக்கார் என்று கேட்கலாம், ஆனால் இந்தியாவில் இருக்கும் போது கட்டும் அளவை விட அங்கு கட்டும் வரி அளவு குறைவாக இருக்கிறது.

//இந்தியாவிற்காக செஸ் ஒலிம்பியாட்டில் கூட விளையாடி வருகிறார். அவர் விளையாடும் போட்டிகள் அனைத்திலும் அவர் இந்தியக் கொடியின் கீழ்தான் விளையாடுகிறார்.
//

ஆனந்த் பெரும்பாலும் ஒலிம்பியாட்டில் ஆடுவதை தவிர்த்து விடுவார். காரணம் அவரது எலோ ரேட்டிங்க் மிக அதிகம், அவர் அவரை விட மிக குறைவான ரேட்டிங்க் உள்ள ஆட்டக்காரருடன் தோற்றாலோ, அல்லது டிரா செய்தாலோ இவரது ரேட்டிங்க் புள்ளி அதிகம் குறையும் அதே அளவுக்கு எதிராளிக்கு ஏறிவிடும்.

மிக நீண்ட காலமாக ஒலிம்பியாடில் ஆடாமல் இருந்து 2004, மற்றும் 2006 ஒலிம்பியாட்டில் மிகுந்த வற்புறுத்தலுக்கு பிறகே ஆடினார். அதுவும் மிக அதிகமான "participation fees" தருவதாக சொன்ன பிறகே.அதிலும் வெகு குறைவான கேம்களில் மட்டும் ஆடினார், மற்ற ஆட்டங்களில் மாற்று ஆட்டக்காரர் ஆடிக்கொள்வார்.

தற்போது அவர் கலந்து கொள்வது எல்லாம் சூப்பர் ஜி.எம் டோர்ணமெண்ட்களில் மட்டும் தான்.

மேலும் செஸ் ஒலிம்ப்பியாட்டில் கலந்துகொள்வது கவுரவத்திற்காக தான், பணம் எல்லாம் பேறாது.எனவே சசிகிரண், டிபியேந்து பருவா, சூர்ய செகர் கங்குலி, ஹம்பி(பெண்கள் பிரிவில்) போன்ற அடுத்த நிலை ஆட்டக்காரர்கள் தான் இந்தியாவிற்காக வழக்கமாக செஸ் ஒலிம்பியாட்டில் ஆடப்போகிறார்கள்.

said...

//V.anand is not getting sponsorship as cricketers used to get or indian chess association is not sponsoring his expenses for participating in chess tournaments. mostly he use spend for his participation and he use to have tournaments at Europe only//

ஆனந்த் விளையாடப்போவதற்கு பணம் செலவழிக்கிறார் என்று சொன்னால் செச் வீரர்கள் சிரிப்பார்கள். அவர் கிளம்பி செல்வது வரை 5 நட்சத்திர ஹோட்டலில் தங்குவது வரைக்கும் செலவு செய்வதோடு அல்லாமல் கலந்து கொள்ளவே ஒரு பெரிய தொகை தருவார்கள் போட்டி அமைப்பாளர்கள்.

ஆரம்ப காலத்தில் , இந்தியன் பேங்க், ராம்கோ சிமெண்ட் என்று அவருக்கு பலரும் ஸ்பான்சர் செய்தார்கள். தற்போதும் அவருக்கு பல பெரிய சர்வதேச ஸ்பான்சர்கள் இருக்கிறார்கள்.

அவரது கேம்களை பத்திரிக்கையில் போட ஒரு கட்டணம் அதுகுறித்து இவரது கருத்துக்களை, விளக்கங்கள் சொன்னால் அதற்கு ஒரு கட்டணம், இவரது கேம்களை தொகுத்து புத்தகமாக போட்டாலும் கட்டணம்.கண்காட்சி ஆட்டங்களில் கலந்து கொண்டாலும் ஒரு தொகை, கணிப்பொறிகளின் திறனை சோதிக்க செஸ் வீரருடன் ஆட வைப்பார்கள் அதற்கு மிக பெரிய தொகையை தருவார்கள்.காச்பரோவ் , டீப் புளு என்ற கணினியுடன் ஆடியதற்காக உலகத்திலேயே வேறு எந்த விளையாட்டு வீரரும் வாங்காத அளவு தொகை வாங்கினார்! அதற்கு அடுத்த நிலை தொகை வாங்கியவர் ஆனந்த்!

said...

வவ்வால், நிறைய தகவல்களைத் தந்திருக்கீங்க. நன்றி. எந்த விளையாட்டு வீரருக்கும் நல்ல கவனிப்பும் ஊக்குவிப்பும் தேவைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனா அது எல்லோருக்கும் ஒரே மாதிரியா இருக்கணும். அல்லது கஷ்டப்படறவங்களுக்கு மட்டும் மனிதாபிமான அடிப்படைல பொருளாதார உதவின்ற மாதிரி இருக்கலாம். இரண்டுமில்லாம மனம் போன போக்கில் பரிசுகள் நிர்ணயம் செய்யப்படறதும் அதுல இருக்கற பாரபட்சங்களும்தான் எனக்கு வருத்தத்தை தருது.

தவறுதலாக பாலா அவர்கள் போட்டிருந்த பின்னூட்டத்தின் டெக்ஸ்ட் நீக்கப்பட்டு விட்டது. மன்னிக்கவும் பாலா.

said...

---சமீபத்தில் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட லோகநாதன் என்ற லெக்சரரின் இறுதிச் சடங்குக்குச் செல்ல குடும்பத்தினருக்கு அவசர அவசரமாக தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்கி வழியனுப்பி வைத்தது(9 பேருக்கு பாஸ்போர்ட், விசா, விமானக் கட்டணம் அனைத்தும் நம் அரசே ஏற்றது)---

இங்கே உட்கார்ந்து கொன்டிருப்பதால், இது தவறல்ல என்று படுகிறது.

ஒன்பது பேருக்கு பயணச்ச்சீட்டு கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் பிடித்திருக்கும். இன்னொரு அரை லட்சம் கடவுச்சீட்டு, விசா போன்ற செலவுகள். திடீரென்று நடுத்தர குடும்பத்தால் இவ்வளவு பணம் புரட்ட முடியுமா?

(அவரை விமானத்தில் இந்தியா கொன்டு வரவும் கிட்டத்தட்ட இதே அளவு செலவாகும். இந்தியாவில் இருந்து ஓரிருவர் அங்கு செல்ல வேண்டும். அப்புறம் கார்கோ. அதன் பின் ஏற்படும் பராமரிப்பு இன்ன பிற...)

said...

//ஒன்பது பேருக்கு பயணச்ச்சீட்டு கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் பிடித்திருக்கும். இன்னொரு அரை லட்சம் கடவுச்சீட்டு, விசா போன்ற செலவுகள். திடீரென்று நடுத்தர குடும்பத்தால் இவ்வளவு பணம் புரட்ட முடியுமா?//


அமெரிக்காவில் அவ்வளவு பெரிய பல்கலைக் கழகத்தில் அத்தனை வருடம் அவ்வளவு நல்ல பதவியிலிருக்கும் ஒருவரது குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தானா என்ற கேள்வி என் மனதுள் எழுகிறது. அப்படியே அவர்கள் நடுத்தர வர்க்கமாயிருந்தாலும், அது முழுக்க முழுக்க அவர்களது குடும்ப பிரச்சினை.

வேண்டுமானால் மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் துரிதமாய் கிளம்புவதற்குத் தேவையான அத்தனை விஷயங்களிற்கும் முன்னுரிமை மட்டும் தந்திருக்கலாம். பண உதவியை இன்னும் என்னால் ஒத்துக் கொள்ள முடிய வில்லை.

இந்த நிகழ்ச்சிக்கு முன்பும், பின்பும் துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் கட்டிட தொழிலாளிகள் மற்றும் வேறு சில தொழிலாளிகள், கூட்டமாய் இல்லாமல் தனியே ஏதேனும் விபத்தின் மூலம் இதே போன்று கொடூரமாய் இருக்கும் போது அந்த தொழிலாளியின் உடலை இந்தியா கொண்டு வருவதற்குள் எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.
இத்தனைக்கும் அவர்கள் நடுத்தர வர்க்கம் கூட இல்லை. அந்த தொழிலாளியின் மூலம்தான் வறுமைக் கோட்டைக் கடக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்களாய் இருப்பார்கள்.

இங்கே பஸ் விபத்துல செத்தா ஒரு காசு. ரயில் விபத்துல செத்தா ஒரு காசு. அதே விமான விபத்துல செத்தா ஒரு காசு.

அது போலத்தான் இதுவும். எந்த நாட்டுல சாகிறோங்கிறதைப் பொறுத்தும் கவனிப்புகளும், சலுகைகளும் அமைகின்றன. இதற்கு என்ன காரணம். காலம் காலமாய் நம் அடி மனதில் ஊறிப்போன "அமெரிக்கான்னா ரொம்ப உயர்ந்தது" அப்படீங்கிற எண்ணமா? அல்லது இதுக்கு முன்னாடி இருந்தவங்க இப்படி கொடுத்தாங்க. நானும் அப்படியே சலுகைகளைக் கொடுக்கிறேன் எனும் பைத்தியக்காரத்தனமா???