Tuesday, July 24, 2007

என்னாத்தை சொல்வேனுங்கோ?

பத்திரிக்கை தர்மத்தை பத்தி போன பதிவுல எழுதியிருந்தேனில்லையா, நண்பரொருவர் கூப்பிட்டு குமுதம் ஜோதிடத்துல சனிப் பெயர்ச்சி பலன் பாத்தியான்னு கேட்டார். இன்னும் இல்லையேன்னு சொன்னேன். உன் ராசிக்கு பாக்குறயோ இல்லையோ பொதுப் பலன்கள்ன்ற தலைப்புல தமிழ்நாட்டுக்கு போட்டிருக்கறதை மட்டும் கண்டிப்பா பாத்துடுன்னார் அவர். சரின்னு பாத்ததோட பலன்தான் இந்த பதிவு... இதுதான் பத்திரிக்கை தர்மத்தின் அழகு... இதுல நான் சொல்ல என்ன இருக்கு.. ஹைலைட் செய்திருக்கற விஷயங்கள் இவங்க கணிச்ச பலன்களா இல்லை இவங்களோட வேண்டுதலா????

*******************************************************

தமிழ்நாடு!

தமிழகத்தைப் பொறுத்தவரையில், இந்த சனிபகவானின் சிம்மராசி சஞ்சார காலத்தில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நிகழவிருக்கின்றன. ‘இப்படியும் நடக்குமா?’ என்ற அளவிற்குக் கூட்டணி மாறுதல்கள் ஏற்படும்.

துறவிகள் சிலர் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கி, பண்டைய தெய்வீகப் புகழையும், பெருமையையும் பெற்றுத் திகழ்வார்கள் எனவும், சனிபகவானுக்கு ஏற்படும் குருபகவானின் சுபப்பார்வை எடுத்துக்காட்டுகிறது.

அரசியல் கட்சிகள், தலைவர்கள் ஆகியோரிடையே போட்டியும், பொறாமையும் குறையாது
. பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும் தமிழகம் மேலும் மேலும் முன்னேற்றமடையும். மக்களின் பொருளாதார நிலை உயரும். நோய்கள் குறையும். தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரிக்கும். மக்களிடையே தெய்வ பக்தியும், ஆன்மிகச் சிந்தனைகளும், தர்மநெறியும் ஓங்கும். புராதன திருக்கோயில்கள் பல புனர்நிர்மாணம் செய்யப்பட்டு ஒளிவீசித் திகழும். ராமர் பாலத்தைப் தகர்த்தெறியும் முயற்சி தோல்வியுறும்.

********************************************************

டீச்சர் சொன்னா மாதிரி அட்டைய கிழிச்சுட்டா உள்ள எல்லா பத்திரிக்கையும் ஒரே மாதிரிதான்னாலும் கூட விகடன் அளவு குமுதத்தின் மேல பெருசா மதிப்பில்லைன்றதால இதை நான் பெரிய விஷயமா நினைக்கலை. இருந்தாலும் ஒரு நல்ல காமெடிய மக்களோட பகிர்ந்துக்கலாமேன்னுதான்....

12 comments:

said...

லக்ஷ்மி

இது காமெடி இல்ல வயித்தெரிச்சல்..
ஒருவேளை இது பழகிப்போய் காமெடி ஆயிடுச்சோ

said...

போட்டியில் கலந்து கொள்ளும்படித் தங்களை அன்போடு அழைக்கிறேன்
http://selventhiran.blogspot.com/2007/07/blog-post_24.html

said...

நல்ல காமெடியாக பகிர்நதுக்கலாம்

said...

அய்யனார், சுல்தான், செல்வேந்திரன் - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

ஆமாம் அய்யனார் - பழகி விட்டதாலும் இப்படித்தானிருக்குமென்றே எதிர்பார்ப்புமிருப்பதால் வயத்தெரிச்சல் போயி காமெடி ஆகிடுச்சு. என்னோட முந்தைய கட்டுரைக்கும் இதுக்குமான தொனியில் பயங்கர வித்தியாசமிருப்பதற்கும் இதுவே காரணம். விகடனிடம் இன்னமும் கூட பெரும்பான்மை மக்கள் கொஞ்சம் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். இவங்களுக்கு அது கிடையாது.

செல்வேந்திரன் - போட்டிக்கான அழைப்புக்கும் நன்றி. ஆனா என்ன பிரச்சனைன்னா, தஞ்சை மாவட்டத்துக்குன்னு ரொம்ப பிரத்யேகமான வழக்கு மொழி ஒன்னும் கிடையாது. அதான் யோசிச்சிட்டிருக்கேன்.

said...

சரியான தலைப்பு!!!!

said...

சரி அது இருக்கட்டும். பொதுவாக ஜாதகம் பார்ப்பதற்கு நட்சத்திரமோ அல்லது இராசியோ தேவை. தமிழ் நாட்டிற்கு எந்த நட்சத்திரம்? என்ன இராசி? சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஜோசியர் மீது வைத்திருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது.

said...

லஷ்மீ, எனக்கு ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம். ராமாயணத்துல ராமர் எங்க பாலம் கட்டினார்? பாலம் கட்டுவது என்றால் அஸ்திவாரம் போட்டு,
தூண்கள் எழுப்பி, பாதை போடுவது இல்லையா? ஆனால் ராமர், கடல்ராஜனை வேண்டியது, க.ரா கொடுத்த வரம் என்ன?
என்னப் போட்டாலும் மிதக்கும் என்றல்லவா? அதனால் அணில்குட்டியில் இருந்து குரங்கு, கரடி, மனிதர்கள் வரை கையில் கிடைத்த கல், பாறைகளை சமுத்திரத்தில் தூக்கிப் போட்டதும், அவை முழுகாமல் மிதக்க தொடங்குகின்றன, ராமனின் சேனைகள்,
அதில் நடந்து இலங்கையை அடைகின்றன. இதுதான் நான் படித்ததும்,இதில் பாலம் கட்டுவது என்று எதுவும் வரவில்லையா?
அபப்டியிருக்க நாசா எடுத்த பாலம், கடலில் இருக்கிறது என்கிறார்களே???

said...

ராசு, செந்தில், உஷா - அனைவருக்கும் நன்றி முதலில்.

செந்தில் - அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை இந்தியாவுக்கும் கணிச்சிருந்தார். இந்தியாவுக்கு ஜனன லக்கினம் கடகம்னு குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டுக்கு எதும் அதுபோல குறிப்பிடலை. எப்படி இதையெல்லாம் கண்டுபிடிக்கிறாங்களோ தெரியலை :)

உஷா - உங்க சந்தேகத்துல ஒரு பாதிக்கு என்னிடம் விடையிருக்கு - அதாவது பாலம்னா அது அஸ்திவாரம் போட்டு தூணெல்லாம் வச்சுதானிருக்கணும்னு இல்லையே. சில வாய்க்கல்களில் இரு கரைக்கும் நடுவுல ஒரு பலகைய போட்டு அதை மரப்பாலம்னுவாங்க. So, இரு கரைகளை இணைத்தால் அது பாலம். ஆனா நாசா எடுத்த படத்துக்கும் அந்த ராமருக்கும் என்ன சம்பந்தம்னு ராமருக்கே கூட தெரியாதாயிருக்கும். ஈறைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்குறதுன்னுவாங்களே அந்த மாதிரி விஷயம் இதெல்லாம்.

அப்புறம் இந்த ராமர் பாலம் பத்தி இன்னொரு கதை கூட எங்க பாட்டி சொல்லுவாங்க. அனுமாரோட தோழர்களில் ஒரு குரங்கு சிறுவனாயிருக்கும் போது தவம் செய்யும் முனிவர்களின் பூஜைப் பாத்திரங்களை கொண்டு போய் அருகில் இருந்த நீர் நிலையில் போட்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், தங்களின் வசதிக்காக அந்த முனிவர்கள் இந்த வானரம் எதைப் போட்டாலும் அது மிதக்கும்படியான சாபத்தை கொடுத்ததாகவும் அந்த சாபத்தையே வரமாக உபயோகித்து அந்த குரங்கின் மூலமே பாலம் கட்டி முடிக்கப் பட்டதாகவும் சொல்லுவாங்க. அதுல கூட எனக்கு ஒரு சந்தேகமிருக்கு - கற்கள் வரிசையா மிதந்தா கூட அதுல எப்படி ஏறி நடக்க முடியும்? நகராதோ? இது என்னோட சந்தேகம்.

நீங்க ஒரு சந்தேகம் கேட்டா திருப்பி நான் ஒன்னு கேட்டு உங்களை குழப்பிட்டேன் பாத்தீங்களா? ;)

said...

லஷ்மி,
இந்த நாடு, மாநிலம் இதுக்குலாம் ராசி கணக்கிடுவது தோன்றிய நாள் நேரத்தை வைத்து, அதாவது இந்தியா சுதந்திரம் ஆன நாள், தமிழ்நாடு என பெயரிட்ட நாள்!ரொம்ப காமெடிய இருக்கில்ல? அதுவும் குமுதம் போட்டுஇருக்கிற ஜோதிட பலன்கள் எல்லாம் சுத்தம்!

என்னைப்பொருத்தவரை குமுதம் விகடன் எல்லாமே, ஒரேப்போல பணம் பண்ணுவதில் குறிப்பாக உள்ளவர்கள் வித்தியாசமே இல்லை!

சிறிது நாட்களுக்கு முன்னர் விகடன் எப்.எம் ரேடியோக்கள் பற்றி கட்டுரைப்போட்டது அதில் குமுதம் இயக்கும் ஆஹா ரேடியோப்பற்றி மட்டும் குறிப்பிட திட்டமிட்டே மறந்துவிட்டார்கள்.

பத்திரிக்கை தர்மம் வீசம் என்ன விலைகேட்பவர்கள் இவர்கள்!

ராமர்ப்பாலம் என்பதே ஒரு செவிவழிவந்த கட்டுக்கதை தான்!

இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கும் குறுகிய பகுதிக்கு இஸ்த்துமஸ்(isthumas) என்று பெயர் அது ஒரு புவியியல் அமைப்பு ,வட,தென் அமெரிக்காவிடையே உண்டு இப்படி.இந்தியா இலங்கை இடையேயும் அப்படி தான் உள்ளது ஆனால் நீரில் மூழ்கி உள்ளது.

இதில் ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்கள் ராமருக்கு பாலம் கட்ட உதவியவர்கள் என அவர்களே சொல்லிக்கொண்டு சேதுபதிகள் எனப்பட்டம் சூட்டிக்கொண்டார்கள்! சேது என்றால் அணை , நீரைத்தேக்கும் ஒரு கட்டுமானம் எனப்பொருள்! அவர்களைப்பின்பற்றி புதுக்கோட்டை மன்னர்கள் தொண்டைமான்கள் என்று பட்டம் போட்டுக்கொண்டார்கள் தொண்டை என்றாலும் அணை அல்லது இணைப்பு எனப்பொருள்வரும்.

இதில் ஒரு ஆச்சரியம் உண்டு, இஸ்துமஸ் என்றாலும் தொண்டை என ஒரு அர்த்தம் வரும், கரப்பான் பூச்சியின் தலையும் உடலும் இணைக்கும் குழலுக்கு(தொண்டை) இஸ்துமஸ் என்று தான் பெயர்.

said...

வாங்க வவ்வால், வழக்கம் போல் நிறைய புதிய விஷயங்களுடன் வந்திருக்கீங்க. நன்றி.

சேதுபதி மற்றும் தொண்டைமான் மன்னர்கள் இருவருமே பெண் கொடுத்து/எடுத்து நெருக்கமான தொடர்பிலிருந்தவர்கள் எனத்தெரியும். ஆனால் இந்த பெயர்க்காரணம் இது வரை தெரியாது. அதே போல் பொதுவா ஜோதிடத்தில் ஒரளவுக்கு நாட்டுக்கு பலன்கள் சொல்வார்கள் - எப்படியென்றால் இந்த வருடம் மழை பெய்யுமா, பஞ்சம் வருமா, போர் வருமா என்றெல்லாம் சொல்லுவார்கள், புது வருட பஞ்சாங்கம் படிக்கும் போது. அதாவது கொஞ்சம் நம்பும்படியிருக்கும். இவங்க என்னடான்னா, சென்னை மத்திய சிறைச்சாலையில் A பிளாக்கிலிருப்பவங்க விடுதலையாவாங்கன்ற ரேஞ்ச்சுக்கு எடுத்து விடறாங்க. என்னமோ போங்க.

said...

oru pakkam ariviyal ulaham bramikka vachikkittu irukku - innum thamizh naattula intha aanndu eppadi irukkum, intha naal eppadi irukkumnu pesiye pozhuthaik kazhichchikittu irukkom.

yaarudaya sollukko ivanga penaa uruvam kodukkuthu - kadaisiyil thamizh naade urukkulainthu nikkuthu.

- ranjith

said...

i am very sorry for this lengthy pasting in the feedback. i am unable to give the link in the feedback. even if i give, the accessability might be difficult so i am copy pasting it.
___________________________
the figure of modern-day Tyre was given in the orignal article.
above the following subtitle.
______________________
Engineering marvel? A picture of modern-day Tyre, which still remains connected to the mainland of Lebanon.
Credit: PNAS

_______________________
Alexander the Not-So-Great

By John Simpson ScienceNOW Daily News 14 May 2007

For a few months in history, world domination depended on a bridge built upon sand. To conquer the almost impenetrable island of Tyre in 332 B.C.E., Alexander the Great had his engineers construct a land bridge across a kilometer of open water. Given that his army had only basic tools and was under constant attack, the feat seems almost miraculous. But was it? After analyzing the past 10,000 years of coastal sediment deposits, a team of researchers concludes that Mother Nature--not the renowned Greek military commander--was the primary bridge builder.
Alexander was the first commander to attempt to conquer the known world, and his army had just captured the Phoenician cities of Byblos and Sidon. In nearby Tyre, he saw a strategic outpost that would give him a supply and reinforcement port to control the Eastern Mediterranean. But Tyre proved a tough nut to crack. Besides being protected by 50-meter-high walls, the ancient city occupied an island a kilometer off the coast of present-day Lebanon, surrounded by seas as deep as 10 meters. History records that, after seven months of battle, Alexander's army breached the island's defenses by constructing a bridge of timber, stone, and rubble and then used battering rams to puncture an entryway into the cities' walls--a feat that effectively led to the end of the Phoenician Empire.
But just how impressive was this achievement? Geoscientist Nick Marriner and colleagues at the European Center for Research and Teaching on the Geosciences of the Environment (CEREGE) in Aix-en-Provence, France, studied sediment records off the coast of Lebanon and microfossil evidence from core sites on the Tyrian peninsula. The team concludes that at no point did Alexander's engineers contend with anything close to 10 meters of water. Instead, an outpouring of sediment over 5500 years from the nearby Litani delta formed an underwater platform between the mainland and Tyre. As the rise in sea level slowed and agriculture developed, sedimentation rates increased. In addition, Tyre acted as an immense shield to quash waves, allowing material to accumulate on its Lebanon-facing side. By 332 B.C.E., the bridge was within one to two meters of mean sea level, the team reports online this week in Proceedings of the National Academy of Sciences.
Jean-Daniel Stanley, geoarchaeologist at the Smithsonian in Washington, D.C., says the formation of the natural underwater bridge isn't surprising, given what is known about sediment flow. But that's not to dismiss Alexander's accomplishment, which set the stage for his continued conquests before his death at age 32. Considered by some historians as his greatest military achievement, the story of Tyre--and the legend of Alexander the Great--might have read quite differently without an assist from Mother Nature.

- sorry again for copy pasting a huge stuff - ranjith