Future Generali India Life Insurance Co. Ltd. என்ற காப்பீட்டுத் திட்ட நிறுவனத்திடமிருந்து நேற்று மாலை வந்த ஒரு விளம்பர குறுஞ்செய்தி -
மும்பையில் நடந்த துயர சம்பவங்கள் உங்களுக்கு வாழ்வு எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை உங்களுக்கு உணர்த்தியிருக்கும். நாங்கள் உங்களுக்கு உதவவே காத்திருக்கிறோம். முழுமையான காப்பீட்டுத் திட்டங்களுக்கு 567678 என்ற எண்ணுக்கு FG என்று டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்புங்கள்.
பி.கு: திறந்தவெளி பல்கலைக் கழக சேர்க்கை பற்றிய குறுஞ்செய்திகளிலிருந்து இது போன்ற தலைவலி தரும் விளம்பரங்கள் உட்பட தேவையில்லாத இம்சைகளைத் தவிர்க்க ஏதேனும் வழியிருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்...
Saturday, November 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
Do not call registerஇல் பதிவு(உங்கள் சர்வீஸ் provider)
செய்யலாம்.
அதுவரைக்கும் என் வலைக்கு வந்து
“மீண்டும் ஒரு காதல் கதை” படித்து
வாழ்த்தலாம்/சாத்தலாம்.
ரொம்ப கஷ்டம் தான். எங்க இருந்து இவுங்களுக்கு தொலைபேசி எண் கிடைக்கும்னே தெரியல..... :(
நிறுத்தனும்... எல்லாத்தையும் நிறுத்தனும்
பத்திரிகையே படிக்காமல் இருக்கலாம். லக்ஷ்மி .
என்ன செய்வது.
குழம்பிய குளத்தில் மீன் பிடிக்க இப்போது அவர்களுக்கு நேரம்.
அவர்கள் எழுத விட்ட வரி/.....இதுவே நீங்களாக இருந்திருந்தாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅல்!!!!!
'என்னை அழைக்காதே' என்ற TRAI தரும் சேவையில் உங்கள் கைபேசி எண்ணை இணைத்துக் கொள்ளுங்கள்.
முகவரி: http://www.ndncregistry.gov.in/
நீங்க சொன்ன 'அரிசி' வாங்கும்போது பொடி எழுத்துலே இருப்பதைப் படிக்க முடியாத அளவு பொடிசாயும், புரிஞ்சுக்கமுடியாத ஒரு மொழி(ஆங்கிலமுன்னு அவுங்க சொல்றாங்கப்பா)யிலும் போட்டுவைக்கிறாங்களே அதையும் இங்கே சொல்லிக் கொஞ்சம் புலம்பிக்கவா?
\\ துளசி கோபால் said...
நீங்க சொன்ன 'அரிசி' வாங்கும்போது பொடி எழுத்துலே இருப்பதைப் படிக்க முடியாத அளவு பொடிசாயும், புரிஞ்சுக்கமுடியாத ஒரு மொழி(ஆங்கிலமுன்னு அவுங்க சொல்றாங்கப்பா)யிலும் போட்டுவைக்கிறாங்களே அதையும் இங்கே சொல்லிக் கொஞ்சம் புலம்பிக்கவா?\\
அதான் புலம்பிட்டியலே ரீச்சர், புலம்பிட்டியலே பின்னே என்ன பர்மிஷன்:-))
"அப்பா காணாம போயிட்டாங்கன்னா" அப்படீன்னு ஒரு விளம்பரம் வேற வருது. கொடுமை.. எனக்கு தான் பக்கு பக்குன்னு ஆச்சு!
"நிறுத்தனும்... எல்லாத்தையும் நிறுத்தனும்""..
அவனை நிறுத்த சொல்லு .. நான் நிறுத்தேறுன்னு சொல்ல போறாங்க
:-(((
Post a Comment